தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தல்! வேட்பாளர்களை அறிவித்த டி.சிவா அணி!! 

 

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தல்! வேட்பாளர்களை அறிவித்த டி.சிவா அணி!! 

நடிகர் மற்றும் தயாரிப்பாளர் விஷால் தமிழ்நாடு தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு தலைமை வகித்து வந்தார். போன வருடம் ஏப்ரல் மாதத்தோடு அவரது பதவிக்காலம் முடிவடைந்தது. ஏற்கனவே தயாரிப்பாளர் சங்கத்தில் பல்வேறு குளறுபடிகளும் குற்றச்சாட்டுகளும் எழுந்து வந்தன. இதனால் தமிழ்நாடு அரசு சிறப்பு அதிகாரியை தயாரிப்பாளர் சங்கத்திற்கு நியமித்தது. 

டி.சிவா அணி

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலை ஜுன் 30-ம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  தற்போது அம்மா கிரியேஷன்ஸ் T. சிவா அவர்கள், வரவிருக்கும் தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலுக்காக வேறு தயாரிப்பாளர்களைக் கொண்ட புதிய குழுவை அறிவித்துள்ளது. 

தயாரிப்பாளர் சங்க தேர்தல்

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்களின் பாதுகாப்பு அணி என்று டி.சிவா தலைமையிலான அணிக்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதில் டி.சிவா தலைவராகவும், துணைத்தலைவர்களாக ஆர்.கே.சுரேஷ், தனஞ்செயன், பொருளாளராக முரளிதரன், செயலாளர்களாக தேனப்பன், ஜே.எஸ்.கே.சதீஷ்குமார் ஆகியோர் போட்டியிட உள்ளனர். இந்த அணியிலிருந்து செயற்குழு உறுப்பினர்களாக நடிகர் ராதாரவி, கே.ராஜன், கே.எஸ்.ஸ்ரீநிவாசன், சித்ரா லெட்சுமணன், மனோபாலா, ஆர்.வி.உதயகுமார், மனோபாலா, பாபு கணேஷ், சுப்பு பஞ்சு உள்ளிட்ட 21 பேர் போட்டியிடுகின்றனர்.