தமிழில் அறிமுகமாகும் ‘அர்ஜுன் ரெட்டி’!: தமிழில் ட்வீட் போட்டு வாழ்த்திய கிரிக்கெட் வீரர்!
தமிழில் அறிமுகமாகும் ‘அர்ஜுன் ரெட்டி’ நாயகன் விஜய் தேவரகொண்டாவுக்கு பிரபல கிரிக்கெட் வீரர் தமிழில் ட்வீட் போட்டு வாழ்த்தியுள்ளார்.
சென்னை: தமிழில் அறிமுகமாகும் ‘அர்ஜுன் ரெட்டி’ நாயகன் விஜய் தேவரகொண்டாவுக்கு பிரபல கிரிக்கெட் வீரர் தமிழில் ட்வீட் போட்டு வாழ்த்தியுள்ளார்.
ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடித்துள்ள ‘நோட்டா’ திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியானது. ரொமான்ஸ் டிராக்கில் இருந்து விலகி அரசியல் சார்ந்த கதையில் விஜய் தேவரகொண்டா நடித்துள்ள இப்படத்துக்கு ரசிகர்களிடையே அதிக எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்நிலையில், இப்படத்தின் புரொமோஷனுக்காக விஜய் தேவரகொண்டா அனைத்து அரசியல் கட்சிகளையும் விமர்சித்து வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை கிளப்பியது. இந்த வீடியோவை பார்த்த பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், விஜய் தேவரகொண்டாவுக்கு தமிழில் வாழ்த்துக் கூறியுள்ளார்.
வணக்கம் அர்ஜுன் ரெட்டி எப்பிடி இருக்கீங்க தம்பி இப்போ தான் வீடியோ பாத்தேன் உங்க மரியாதை பார்த்து சிலிர்த்து போய்ட்டேன் இந்த பேரு, புகழ் எல்லாம் தமிழ் மக்கள் குடுத்தது வாழ வைக்குற தெய்வம் உங்க படம் நல்லா வரட்டும் தம்பி வாழ்த்துக்கள் @TheDeverakonda @put_chutney @StudioGreen2 pic.twitter.com/mmHiluQXCs
— Harbhajan Turbanator (@harbhajan_singh) October 4, 2018
இது குறித்த அவரது ட்வீட்டில், ’வணக்கம் அர்ஜுன் ரெட்டி, எப்படி தம்பி இருக்கீங்க.. இப்ப தான் வீடியோ பாத்தேன். உங்க மரியாதை பார்த்து சிலிர்த்து போய்ட்டேன் இந்த பேரு, புகழ் எல்லாம் தமிழ் மக்கள் குடுத்தது வாழ வைக்குற தெய்வம் உங்க படம் நல்லா வரட்டும் தம்பி வாழ்த்துக்கள்’ என்று ட்வீட்டியுள்ளார்.
தமிழ் மீது தனிக்காதல் கொண்டுள்ள ஹர்பஜன் சிங், சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியில் இடம்பெற்றதில் இருந்தே ஹர்பஜன் சிங் பல ட்வீட்களை தமிழில் பதிவிட்டு தமிழ் மக்களையும், ரசிகர்களையும் கவர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.