தனுஷின் ஜகமே தந்திரம் போஸ்டரும் காப்பியா? இணையத்தில் வைரலாகும் போட்டோ!

 

தனுஷின் ஜகமே தந்திரம் போஸ்டரும் காப்பியா? இணையத்தில் வைரலாகும் போட்டோ!

ஒய்நாட் ஸ்டுடியோஸ் சார்பில் ஷஷிகாந்த் மற்றும் ரிலையன்ஸ் நிறுவனமும் இப்படத்தை சேர்ந்து தயாரிக்கிறது.

‘பேட்ட’ படத்தை தொடர்ந்து இயக்குநர்  கார்த்திக் சுப்புராஜ் நடிகர் தனுஷ் நடிக்கும் 40வது படத்தை இயக்கி வருகிறார். இப்படத்திற்கு ஜகமே தந்திரம் என பெயரிடப்பட்டுள்ளது.  இப்படத்தில் தனுஸுக்கு ஜோடியாக நடிகை ஐஸ்வர்யா லட்சுமி   நடிக்கிறார். சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.மேலும்  பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஒய்நாட் ஸ்டுடியோஸ் சார்பில் ஷஷிகாந்த் மற்றும் ரிலையன்ஸ் நிறுவனமும் இப்படத்தை சேர்ந்து தயாரிக்கிறது.

ttn

நேற்று இப்படத்தின்  மோஷன் போஸ்டரை படக்குழு வெளியிட்டது. மேலும் இப்படம் உழைப்பாளர்கள் தினமான  மே 1-ம் தேதி ரிலீசாகும் என்றும் அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ttn

இந்நிலையில் இந்த படத்தின் மோஷன் போஸ்டரில் உள்ள ஒரு ஸ்டில், டாவின்சி வரைந்த இயேசு கிறிஸ்துவின் ஓவியம் என்று குறிப்பிட்ட புகைப்படத்துடன் மேற்கோள் காட்டி வைரலாக்கப்பட்டு வருகிறது.  ஆங்கில படங்களில் சுட்டது போதாதென்று  டாவின்சி ஓவியத்தையும் காப்பி அடிக்கிறீர்களா என்று நெட்டின்கள்  கிண்டல் செய்து வருகிறார்கள்.