தணிக்கை சான்றிதழ் பெற்றது தனுஷின் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’

 

தணிக்கை சான்றிதழ் பெற்றது தனுஷின் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’

நடிகர் தனுஷ் நடித்துள்ள  ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தின் சென்சார் சான்றிதழ் கிடைத்துள்ளது

சென்னை: நடிகர் தனுஷ் நடித்துள்ள  ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தின் சென்சார் சான்றிதழ் கிடைத்துள்ளது. 

இயக்குநர் கெளதம் மேனன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் எனை நோக்கி பாயும் தோட்டா. இதில் தனுஷுக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்துள்ளார். கடந்த 2016ம் ஆண்டு தொடங்கப்பட்ட படப்பிடிப்பு நீண்ட  இடைவெளி விட்டு ஒருவழியாகக் கடந்த ஆண்டு நிறைவடைந்தது. 

இந்த நிலையில், தற்போது இப்படத்தின் போஸ்ட் புரோடக்‌ஷன் பணிகள் முடிந்த நிலையில்,சமீபத்தில் சென்சாருக்கு அனுப்பப்பட்ட ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தைப் பார்த்த தணிக்கை அதிகாரிகள் அதற்கு யு/ஏ சான்றிதழ் அளித்துள்ளனர். இதையடுத்து விரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.