தடையை மீறி இணையதளத்தில் வெளியானது சூர்யாவின் என்.ஜி.கே! அதிர்ச்சியில் படக்குழு 

 

தடையை மீறி இணையதளத்தில் வெளியானது சூர்யாவின் என்.ஜி.கே! அதிர்ச்சியில் படக்குழு 

நடிகை சூர்யா நடிப்பில் நேற்று வெளியான என்.ஜி.கே திரைப்படம் தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் வெளியாகிப் படக்குழுவை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

சென்னை: நடிகை சூர்யா நடிப்பில் நேற்று வெளியான என்.ஜி.கே திரைப்படம் தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் வெளியாகிப் படக்குழுவை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

தியேட்டரில் ஒரு படம் ரிலீஸ் ஆகிறதோ இல்லையோ, தமிழ் ராக்கர்ஸில் தினமும் ஒரு படம் ரிலீஸ் ஆனபடியே தான் இருக்கிறது. கோலிவுட்,டோலிவுட், மாலிவுட், பாலிவுட், ஆலிவுட் என்று அனைத்து மொழி படங்களும் தமிழ் ராக்கர்ஸில் வெளியாகிக் கொண்டே இருக்கிறது. 

ஒரு படம் வெளியான அன்றைய தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் வெளியாகிப் படத்தின் வசூலை குறைத்து வருகிறது. இதை முடக்க பல்வேறு வகையான முயற்சியெடுத்து அனைத்தும் தோல்வியில் தான் முடிகிறது. 

சூர்யா

இந்த நிலையில் சூர்யா- செல்வ ராகவன் கூட்டணியில் உருவாகியுள்ள என்.ஜி.கே திரைப்படம் நேற்று வெளியானது. சாய்பல்லவி, ரகுல் ப்ரீத் சிங்க் என்று இரு கதநாயகிகள் நடித்துள்ளனர். கிட்ட தட் ஒரு வருடம் சூர்யா படம் ஏதுவும் வெளிவராததால்,கண்டிப்பாக இப்படம் ஹிட் அடிக்கும் என்று அவரது ரசிகர்கள் மிகுந்த நம்பிக்கையுடன் இருந்தனர். ஆனால் படத்தை பார்த்த ரசிகர்கள் கலவையான பதிலே கூறிவருகின்றனர். இதையொட்டி படத்தின் வசூல் பாதிப்படையலாம் என்று பேசப்பட்டது வருகிறது. 

nngk

இந்த நிலையில் படம் நேற்று வெளியான சில மணி நேரத்தில் தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் திருட்டுத்தனமாக வெளியானது. ஏற்கனவே படத்தின் வசூல் பற்றி கவலைப் பட்டுக்கொண்டு இருந்த படகுழுக்கு இது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.