டிக் டாக்கில் மாஸ்டர் பட பாடல்கள் 1500 மில்லியன் பார்வைகளைக் கடந்து சாதனை!
படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்பட்ட நிலையில் கொரோனாவால் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போயுள்ளது.
பிகில் திரைப்படத்தைத் தொடர்ந்து விஜய் நடிக்கும் மாஸ்டர் படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார். மேலும் நடிகர் சாந்தனு, நடிகை மாளவிகா மோகனன், ஆண்டனி வர்கீஸ். விஜே ரம்யா,கௌரி கிஷன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு டெல்லி, கர்நாடகா சென்னையில் நடைபெற்ற நிலையில், மூன்றாம் கட்டப் படப்பிடிப்பு அண்மையில் நெய்வேலியில் நடைபெற்றது. படப்பிடிப்புகள் பெரும்பாலும் முடிவடைந்துவிட்டதாகவும், இதனால் இப்படம் ஏப்ரல் 9 ஆம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்பட்ட நிலையில் கொரோனாவால் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போயுள்ளது.
குட்டி ஸ்டோரி, வாத்தி கம்மிங் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற ‘வாத்தி ரெய்டு’ என்ற படத்தின் 3-வது பாடலும் ரசிகர்களைக் கவர்ந்துள்ளது.
They call me Master, Vetrigal varum faster ??
Thanks for the 1500M fam ❤️ Keep it counting nanbaa! #1500MForMaster pic.twitter.com/3FCKAV1zMa— XB Film Creators (@XBFilmCreators) April 23, 2020
இந்நிலையில் மாஸ்டர் படத்தின் பாடல்களை டிக் டாக் பயனர்கள் பலர் வீடியோக்களாக வெளியிட்டனர். தற்போது டிக் டாக் செயலியில் மட்டும் ‘மாஸ்டர்’ பாடல் அடங்கிய வீடியோக்கள் மட்டும் 1500 மில்லியன் பார்வைகளைக் கடந்து சாதனை புரிந்துள்ளது. இதனால், ‘மாஸ்டர்’ படக்குழுவினர் பெருமகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கொரோனா தொற்று பீதி அடங்கியவுடன் வரும் ஜூன் 22 ஆம் தேதி விஜய் பிறந்தநாளை முன்னிட்டு மாஸ்டர் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.