‘சூர்யா 37’ டைட்டில் இதுவா?
சூர்யா நடித்து வரும் ‘சூர்யா 37’ டைட்டில் குறித்த தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது
சென்னை: சூர்யா நடித்து வரும் ‘சூர்யா 37’ டைட்டில் குறித்த தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
‘அயன்’, ‘மாற்றான்’ திரைப்படங்களை தொடர்ந்து இயக்குநர் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் ‘சூர்யா 37’ திரைப்படத்தின் டைட்டில் குறித்த தகவலை இயக்குநர் கே.வி.ஆனந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
சூர்யா, மோகன்லால், ஆர்யா, போமன் இராணி, சாயீஷா, சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்துள்ள வரும் இப்படத்தின் முதற்கட்ட ஷூட்டிங் லண்டனில் தொடங்கி இரண்டாவது கட்ட ஷூட்டிங்கும் நிறைவடைந்துள்ளது. லைகா நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்தில் நடிகர் சூர்யா தேசிய பாதுகாப்புப் படை கமாண்டோவாக நடித்து வருவதாக கூறப்படுகிறது.
Merry Christmas !?Select the title for Tamil #Suriya37 @Suriya_offl @Mohanlal @arya_offl @Jharrisjayaraj @LycaProductions
— anand k v (@anavenkat) December 25, 2018
இந்நிலையில், ரசிகர்கள் தொடர்ச்சியாக ‘சூர்யா 37’ அப்டேட் குறித்து கேள்வி எழுப்பி வந்த நிலையில், கிறிஸ்துமஸ் வாழ்த்துக் கூறிய இயக்குநர் கே.வி.ஆனந்த், படத்திற்கான 3 டைட்டில்களை பகிர்ந்து, இதில் எந்த டைட்டிலை தேர்வு செய்யலாம் என தெரிவித்திருந்தார்.
‘மீட்பான்’, ‘காப்பான்’, ‘உயிர்கா’ ஆகிய 3 டைட்டில்களில் ரசிகர்களில் பெரும்பாலானோர் ‘உயிர்கா’ என்ற டைட்டிலை தேர்வு செய்துள்ளனர். விரைவில் இப்படத்தின் டைட்டில் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது