சூப்பர் ஸ்டாரின் எனர்ஜிக்கு இது தான் காரணம்: பிரபல ஒளிப்பதிவாளர் ட்வீட்
ரஜினியின் எனர்ஜி குறித்து ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் ட்வீட் ஒன்று வெளியிட்டுள்ளார்.
சென்னை: ரஜினியின் எனர்ஜி குறித்து ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் ட்வீட் ஒன்று வெளியிட்டுள்ளார்.
பேட்ட படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வருகிறார். தர்பார் என்று பெயரிட்டுள்ள இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.
ஹீரோயினாக லேடி சூப்பர் நயன்தாரா நடிக்க, ரஜினியின் மகளாக நிவேதா தாமஸ் நடித்து வருகிறார். மேலும், யோகி பாபு, ஆனந்த் ராஜ், போஸ் வெங்கட், ஹரிஷ் உத்தமன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். தளபதி படத்திற்கு பிறகு இதில் சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்துவருகிறார்.
கடந்த மாத இறுதியில் மும்பையில் தொடங்கிய படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்கள் அடிக்கடி சமூகவலைத்தளங்களில் வெளியாகிப் படக்குழுவை அதிரவைத்தது. மேலும் கடந்த 13ம் தேதி முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில் மீண்டும் 2ம் கட்டம் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.
Rajini Sir is awesome – his energy makes him younger??.. filming him after Thalapathi ?
— SantoshSivanASC. ISC (@santoshsivan) May 30, 2019
இந்த நிலையில் படத்தின் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் ‘ரஜினி சார் அற்புதம். அவர் எனர்ஜி தான் இன்னும் அவரை இளமையாக வைத்திருக்கிறது. ‘தளபதி’ படத்துக்குப் பிறகு அவரை ஒளிப்பதிவு செய்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.