சீதக்காதி படம் எப்படி இருக்கு? இயக்குநர் அட்லீ பாராட்டு!
நடிகர் விஜய்சேதுபதி நடிப்பில் வெளியாகவுள்ள சீதக்காதி திரைப்படம் குறித்து இயக்குநர் அட்லீ பாராட்டு தெரிவித்துள்ளார்.
சென்னை: நடிகர் விஜய்சேதுபதி நடிப்பில் வெளியாகவுள்ள சீதக்காதி திரைப்படம் குறித்து இயக்குநர் அட்லீ பாராட்டு தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய் சேதுபதியின் 25 வது படம் சீதக்காதி. இந்த படத்தை ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்தை இயக்கிய பாலாஜி தரணிதரன் இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் விஜய் சேதுபதி 80 வயதுடைய அய்யா ஆதிமூலம் என்ற முதியவர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். விஜய் சேதுபதிக்கு ஜோடியாக மூத்த நடிகை அர்ச்சனா நடித்துள்ளார். இவர்களுடன் ரம்யா நம்பீசன், பார்வதி நாயர், மகேந்திரன், ராஜ்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
#Seethakathi classy,emotional,comedy entertainer. Lovely film! Kudos to the entire team & best wishes to all!
Spl thanks to the producer @PassionStudios_ for this film.@VijaySethuOffl ??? great effort bro! @govind_vasantha ???
Dir Balaji bro ???— atlee (@Atlee_dir) December 19, 2018
சமீபத்தில் படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து நாளை 8இப்படம் வெளியாக உள்ளது. இந்நிலையில், தற்போது சீதக்காதி திரைப்படத்தைப் பாராட்டி, இயக்குநர் அட்லீ ட்வீட் செய்துள்ளார். அதில், ‘சீதக்காதி – க்ளாஸி, உணர்வுப்பூர்வமான காமெடி பொழுதுபோக்கு திரைப்படம். மொத்த குழுவினரும் பெருமைப்படும் தருணம். அவர்களுக்கு எனது வாழ்த்துகள். பேஸன் ஸ்டூடியோ நிறுவனத்துக்கு எனது சிறப்பான நன்றி. இந்த கடின முயற்சிக்கு சகோதரர் விஜய் சேதுபதியை பாராட்டியே ஆக வேண்டும். இயக்குநர் பாலாஜி தரணிதரண், இசையமைப்பாளர் கோவிந்த் வஸந்தா ஆகியோருக்கு மனமார்ந்த வாழ்த்துகள்’ என பதிவிட்டுள்ளார்.