சிம்பு வீட்டில் டும் டும் டும்: விஜயகாந்தை நேரில் சென்று அழைப்பு விடுத்த டி.ராஜேந்தர்!
தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்தித்து டி.ராஜேந்தர் தனது மகனின் திருமண அழைப்பிதழை வழங்கினார்.
சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்தித்து டி.ராஜேந்தர் தனது மகனின் திருமண அழைப்பிதழை வழங்கினார்.
தமிழ் சினிமாவில் நடிகராகவும், இயக்குநராகவும், இசையமைப்பாளராகவும் வலம் வருகிறார் சிம்பு. இவரது தம்பி குறளரசன் இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான இது நம்ம ஆளு படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார்.
குறளரசன் சமீபத்தில் இஸ்லாம் மதத்திற்கு மாறினார். அதற்கு பலரும் அவர் முஸ்லிம் பெண்ணை காதலித்து வருவதாகவும், விரைவில் திருமணம் நடைபெற்ற உள்ளதாகவும் பேச்சு அடிபட்டது.
இந்நிலையில் குறளரசனின் திருமண வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. அதில் ஒரு பகுதியாக குறளரசன் திருமண அழைப்பிதழை டி.ராஜேந்தர் நேரில் சென்று தேமுதிக கட்சி தலைவர் விஜயகாந்த்திற்கு வழங்கியுள்ளார்.
#TR Invites the #DMDK chief #CaptainVijayakanth For His Son #Kuralarasan‘s Wedding..!@iVijayakant @VijayakanthDMDK #Vijayakanth #TRajendar #Simbu #STR #Kuralarasan #Kuralarasanmarriage @RIAZtheboss pic.twitter.com/Ow7lSpSfvf
— V4U Media (@v4umedia1) April 6, 2019
இது குறித்து விஜயகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் ‘இயக்குநர்-இசையமைப்பாளர்-நடிகர்-சகோதரர் விஜய.T. ராஜேந்தர் அவர்கள் எனது இல்லத்தில் மகன் குறளரசன் அவர்களின் திருமண அழைப்பிதழை வழங்கினார். திரையுலகில் இருவரும் இணைந்து பயணித்த நாட்களை நினைவுகூர்ந்தோம். குறளரசன் இல்லறம் சிறக்க எனது வாழ்த்துக்கள்’ என்று பதிவிட்டுள்ளார்.