சின்மயி, ஸ்ரீரெட்டியை மோசமாக விமர்சித்த தயாரிப்பாளர்: பா.ரஞ்சித் பதிலடி

 

சின்மயி, ஸ்ரீரெட்டியை மோசமாக விமர்சித்த தயாரிப்பாளர்: பா.ரஞ்சித் பதிலடி

ரஞ்சித்தின் பேச்சுக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது. அவர் தன்னுடைய படங்களில் கூட பெண்ணடிமைத்தனத்துக்கு எதிராக களமாடுகிறார்.

பற திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சின்மயி, ஸ்ரீரெட்டியை விமர்சித்த தயாரிப்பாளர் ராஜனுக்கு ரஞ்சித் பதிலடி கொடுத்துள்ளார்.

பெண்கள் மீதான வன்முறை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பணி செய்யும் இடங்களில் பாலியல் ரீதியாகவும், மனதளவிலும் ஒடுக்கப்படுப்படுகிறார்கள். அதிலும் திரைத்துறையில் பெண்கள் ஒடுக்கப்படுவது மிக அதிகம் என #metoo இயக்கத்தின் முயற்சியால் வெளிச்சத்துக்கு வந்தது. சம உரிமை என்பது அவர்களுக்கு எட்டாக் கனியாகவே இருக்கிறது. இந்நிலையில் பற திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய தயாரிப்பாளர் ராஜன், சின்மயி மற்றும் ஸ்ரீரெட்டி ஆகியோரை மோசமாக விமர்சித்தார்.

ghggh

தற்போது பெரிய ஆளுமைகளை எல்லாம் இந்த பெண்கள் எளிதாக குற்றம் சுமத்துகின்றனர். ஸ்ரீரெட்டினு கண்ணகி இருக்கே, என்ன அந்த டைரக்டர் கூப்டாங்க, இந்த நடிகர் கூப்டாங்கனு பேசுது என ராஜன் விமர்சித்தார்.

xxbzb

மேலும் அவர், சமீபத்தில் குஷ்பு தன்னை சீண்ட வந்தவனை கன்னத்தில் அறைந்ததாக கேள்விப்பட்டேன். பெண்களை சீண்ட நினைத்தால் அப்படிதான் செய்ய வேண்டும். இதை பார்த்த சின்மயி, வாய்ப்பு கிடைத்தால் வைரமுத்துவை அறைவேன் என்கிறார்.

AFdsF

கண்ணதாசன், வாலி போல வைரமுத்து எவ்வளவு பெரிய ஆளுமை. அவர் இந்த உயரத்தை அடைய எவ்வளவு சிரமப்பட்டிருப்பார். பப்ளிசிட்டிக்கா அவரை இப்படியெல்லாம் விமர்சிப்பதா?, உன்னை சிதைக்க என்னிடமும் 4 பெண்கள் இருக்காங்கமா என்றார்.

அதன்பிறகு பேசிய ரஞ்சித், தயாரிப்பாளர் ராஜன் ஐயா பேசியதை என்னால் ஏற்க முடியவில்லை. பெண்கள் நீண்டகாலமாக பாலியல் ரீதியாய் சுரண்டப்படுவதை ஏற்றுக்கொள்ள வேண்டும். குற்றச்சாட்டு வைப்பதாலேயே அவர்களை பாதிக்கப்பட்டவர்களாகவும், குற்றவாளிகளாகவும் சித்தரிக்கக் கூடாது. அதுகுறித்து விசாரணை செய்து தீர்வு காண வேண்டும். அதனால் ராஜன் ஐயா வைத்த கருத்தை எதிர்கிறேன் என்றார்.

AFsfsf

ரஞ்சித்தின் பேச்சுக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது. அவர் தன்னுடைய படங்களில் கூட பெண்ணடிமைத்தனத்துக்கு எதிராக களமாடுகிறார். ‘காலா’ படத்தில் வந்த புயல் கதாபாத்திரமும், ‘கபாலி’ படத்தில் இடம்பெற்ற யோகி கதாபாத்திரமும் வெகுவாக பாராட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்க: சூர்யா நம் நாட்டின் மிகச்சிறந்த நடிகர் : ஆஸ்கர் நாயகி புகழாரம்!