சவால் விட்ட தமிழ் ராக்கர்ஸ்: களமிறங்கிய தயாரிப்பாளர் சங்கம்!

 

சவால் விட்ட தமிழ் ராக்கர்ஸ்: களமிறங்கிய தயாரிப்பாளர் சங்கம்!

சென்னை: சர்கார் படத்தை இணையதளத்தில் வெளியிடப்போவதாக அறிவித்த தமிழ் ராக்கர்ஸ் செயலைத் தடுக்கும் விதமாக அனைத்துத் திரையரங்குகளிலும் கேமரா பொருத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

சர்கார் படத்தை விரைவில் இணையதளத்தில் வெளியிடப்போவதாகத் தமிழ் ராக்கர்ஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பது திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இது தொடர்பான ட்வீட்டில், ‘சர்கார்’ படத்தின் ஹெச்டி பிரிண்ட் விரைவில் வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பைரசியை தடுக்க சன் பிக்சர்ஸ் சார்பில் தொடரப்பட்ட வழக்கில், ‘சர்கார்’ படத்தை இணையதளத்தில் வெளியிடக் கூடாது எனச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், தமிழ் ராக்கர்ஸ் ட்வீட் செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இதனால் தமிழ் ராக்கர்ஸ்க்கு பயந்து தயாரிப்பாளர் சங்கமும் அனைத்துத் திரையரங்குகளிலும் கேமரா பொருத்த திட்டமிட்டிருந்தது.இந்நிலையில் , சர்கார் வெளியாகும் திரையரங்குகளில் எவரேனும் கேமிராவிலோ அல்லது மொபைல் போனிலோ படம் எடுக்கிறார்களா எனக் கண்காணிக்க ஆட்களை நியமிக்க வேண்டும் எனத் திரையரங்க உரிமையாளர்களுக்குத் தயாரிப்பாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.