சமந்தாவிற்குப் பிரமாண்டமாக கட் அவுட் வைத்த ரசிகர்கள்!

 

சமந்தாவிற்குப் பிரமாண்டமாக கட் அவுட் வைத்த ரசிகர்கள்!

பொதுவாக அஜித், விஜய்,சூர்யா படங்கள் வெளியாகும் போது அவர்களது ரசிகர்கள் பல்வேறு கொண்டாட்டங்களில் ஈடுபடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

பொதுவாக அஜித், விஜய்,சூர்யா படங்கள் வெளியாகும் போது அவர்களது ரசிகர்கள் பல்வேறு கொண்டாட்டங்களில் ஈடுபடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். அதில் ஒன்று தான் பிரமாண்டமாக கட் அமைப்பது. சர்கார் படம் வெளியான சமயத்தில் கேரள விஜய் ரசிகர்கள், விஜய்க்கு 175 அடி உயர கட் அவுட் வைத்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அதே போன்று சூர்யா ரசிகர்கள் என்.ஜி.கே படம் வெளியான சமயத்தில் 215 அடி கட் அவுட் வைத்து அசத்தினார். 

தற்போது அந்த வரிசையில் நடிகை சமந்தாவும் இணைந்துள்ளார். ஆம்… அவரது நடிப்பில் உருவாகியுள்ள  ‘ஓ பேபி’ திரைப்படம் நாளை வெளியாகவுள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகவுள்ள இந்த படத்தின் மீது ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்பு உள்ளது. 

இந்த நிலையில் இந்த படத்தின் ரிலீசை முன்னிட்டு ஹைதராபாத்தில் உள்ள ஒரு திரையரங்கில் பிரமாண்ட அவருக்கு கட் அவுட் வைத்துள்ளனர். இந்த கட் அவுட்டைப் பார்த்த சமந்தா, அதிர்ந்து போனதாக ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.