கிறிஸ்டோபர் நோலன் பற்றி உங்களுக்குத் தெரியாத ரகசியங்கள்…

 

கிறிஸ்டோபர் நோலன் பற்றி உங்களுக்குத் தெரியாத ரகசியங்கள்…

இன்று உலக சினிமா ரசிகர்கள் அதிகரித்து வருகிறார்கள். நான்கைந்து வருடங்களுக்கு முன்பு கிறிஸ்டோபர் நோலன் என்றால் யார் என்றே தெரியாதவர்கள் கூட, இன்று நான் அவரின் முரட்டு ஃபேன் என்று சொல்லிக்கொண்டுத் திரிகிறார்கள். இவரின் படங்களை ஒரு முறை பார்த்தாலெல்லாம் புரியாது. அந்தளவிற்கு நுண்ணறிவான படங்களை எடுப்பதில் கை தேர்ந்தவர் நலன். இன்று உலகளாவிய பெயரைப் பெற்றுள்ள நோலன் மற்றும் அவரது படங்கள் பற்றி நமக்குத் தெரியாத சில விஷயங்களைப் பார்ப்போம்!

இன்று உலக சினிமா ரசிகர்கள் அதிகரித்து வருகிறார்கள். நான்கைந்து வருடங்களுக்கு முன்பு கிறிஸ்டோபர் நோலன் என்றால் யார் என்றே தெரியாதவர்கள் கூட, இன்று நான் அவரின் முரட்டு ஃபேன் என்று சொல்லிக்கொண்டுத் திரிகிறார்கள். இவரின் படங்களை ஒரு முறை பார்த்தாலெல்லாம் புரியாது. அந்தளவிற்கு நுண்ணறிவான படங்களை எடுப்பதில் கை தேர்ந்தவர் நலன். இன்று உலகளாவிய பெயரைப் பெற்றுள்ள நோலன் மற்றும் அவரது படங்கள் பற்றி நமக்குத் தெரியாத சில விஷயங்களைப் பார்ப்போம்!

cn-90

கிறிஸ்டோபர் நோலன் நிறக்குருடு குறைபாடு உடையவர். இவருக்கு சிகப்பு மற்றும் பச்சை வண்ணங்களை விதியப்படுத்தி பார்க்கமுடியாது. பிறக்கும் போதே இந்த குறைபாடு இவருக்கு இருந்திருக்கிறது. ஆனால் அவர் இதுபற்றி பொதுவெளியில் அவர் தெரிவித்ததில்லை.

நோலன் தனது 7 வயதிலேயே படங்கள் எடுக்கத் தொடங்கிவிட்டார். சிறு வயது முதலே சினிமா மீது அதிக ஆர்வம் கொண்ட நோலன் தனது தந்தையின் சூப்பர் 8 மிமீ கேமராவைப் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டார். அவரது திரைக்கனவுக்கு நண்பர்கள் கூட முடக்கு போட முயற்சித்துள்ளனர். ஆனால் அவரோ தனது படங்களில் பல்வேறு பொம்மைகளையும், உயிரற்ற பொருட்களையும் ஆவணப்படுத்தினார். முதலில் தன்னுடைய படங்களில் மனிதர்களை அரிதாகவே படம் பிடித்துள்ளார்.

cn-89

நோலன் இரட்டைக் குடியுரிமை பெற்றவர். இவரது தந்தை இங்கிலாந்தில் ஒரு விளம்பர நிறுவனத்தை நடத்தி வந்தார். இவரது தாய் அமெரிக்காவைச் சேர்ந்த விமான உதவியாளர். இதனால் நோலனுக்கு இரட்டை குடியுரிமை இருந்தது. யூகே மற்றும் அமெரிக்கா என இருநாடுகளிடும் இவர் குடியேறலாம்.

கிறிஸ்டோபர் நோலன் தனது படத்திற்காக 500 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து அதில் சோளம் வளர்த்தார். இன்டெர்ஸ்டெல்லார் படத்தில் கார் சோளகாட்டிற்குள் செல்லும் காட்சி ஒன்று படமாக்கப்பட்டிருக்கும். படம் முடிந்த பிறகு அந்த சோளத்தை விற்று லாபமும் பார்த்து விட்டனர். 

cornfield

தனது படங்களில் வரும் மைய கதாபாத்திரங்களின் மனைவிகளை சாகடிப்பது இவரது வழக்கம். இவரின், மெமென்டோ, இன்செப்ஷன், இண்டெர்ஸ்டெல்லார், தி பிரெஸ்டிஜ் படங்களைப் பார்த்தால் உங்களுக்கே புரியும்.

2007-ல் டோட்டல் பிலிம் என்ற நிறுவனம் வெளியிட்ட ‘உலக வரலாற்றின் மிகச்சிறந்த இயக்குனர்கள்’ பட்டியலில் நோலனும் இடம்பிடித்துள்ளார்.

the-dark-knight

தி டார்க் நைட் மற்றும் டார்க் நைட் ரைசஸ் படங்களின் மூலம் உலகின் அதிக வசூல் குவித்த இரண்டாவது இயக்குனர் ஆனார். முதலில் ஜேம்ஸ் கேமரூன், டைட்டானிக் படத்திற்க்காக!

இன்செப்சன் படத்தை எடுக்க 8 ஆண்டுகள் திட்டமிட்டார்… இன்றும் இன்செப்ஷன் படம் பார்ப்பவர்கள் மண்டையைப் பிய்த்து கொள்வார்கள். படம் அந்தளவிற்கு குழப்பமாக இருக்கும். இதுவரையில் இந்த மாதிரி ஒரு கதை யாராலும் எழுதப்படவில்லை என்று கூறப்பட்டது. இந்த படத்தை நவீன முறையில் எடுக்க போதிய பணம் கிடைக்காததால் இந்த படத்தை எடுத்துமுடிக்க 8 ஆண்டுகள் எடுத்துக்கொண்டார் நோலன்.

inception-shooting

தி டார்க் நைட் ரைசஸ் படத்தில் ஜோக்கர் கதாபாத்திரத்திற்கு ஹீத் லெட்ஜரை தேர்வு செய்ததற்காக பலரும் நோலனை விமர்ச்சித்தார்கள். ஆனால் அவர் தன் முடிவில் உறுதியாக இருந்தார். அதற்காக பலன் நம் அனைவருக்கும் தெரிந்ததே!

heath-ledger

நோலன் தன் படங்களில் பெரும்பாலும் கிராபிக்ஸ் காட்சிகளை விரும்பாதவர். இன்றும் பிலிம் பயன்படுத்தக்கூடிய கேமராக்களைக் கொண்ட பெரும்பாலும் படங்களை எடுப்பார். மிகவும் தவிர்க்க முடியாத சூழலில் மட்டுமே கிராபிக்ஸ் காட்சிகளை பயன்படுத்துவார்.