கிண்டி பொறியியல் கல்லூரி மாணவர்களின் ‘வாத்தி கமிங்’ சேலஞ்ச் – வீடியோ உள்ளே
மாஸ்டர் படத்தில் இடம்பெற்றுள்ள ‘வாத்தி கமிங்’ பாடலுக்கு நடனமாடி கிண்டி பொறியியல் கல்லூரி மாணவர்கள் சேலஞ்ச் வீடியோ வெளியிட்டுள்ளார்கள்.
சென்னை: மாஸ்டர் படத்தில் இடம்பெற்றுள்ள ‘வாத்தி கமிங்’ பாடலுக்கு நடனமாடி கிண்டி பொறியியல் கல்லூரி மாணவர்கள் சேலஞ்ச் வீடியோ வெளியிட்டுள்ளார்கள்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘மாஸ்டர்’ படத்துக்கு எக்கச்சக்க எதிர்பார்ப்பு எகிறிக் கிடக்கிறது. அந்தப் படத்தின் குட்டி ஸ்டோரி, வாத்தி கமிங் ஆகிய பாடல்கள் வெளியாகி வைரல் ஆகியுள்ளன. வருகிற ஏப்ரல் 9-ஆம் தேதி இந்தப் படம் உலகம் முழுக்க திரைக்கு வெளியாகிறது. அனிருத் இசையமைத்துள்ள மாஸ்டர் படத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சாந்தனு, நாசர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
Bro @anirudhofficial Check this Out, The Biggest ever #VaathiComing Challenge done by CEG Campus Students..✌️? #Master @actorvijay @Jagadishbliss @XBFilmCreators @SonyMusicSouth @imKBRshanthnu @MrRathna @Dir_Lokesh pic.twitter.com/KSK0wr4Kjp
— Niranjan ? (@A_Thalapathyan) March 15, 2020
இந்த நிலையில், மாஸ்டர் படத்தில் இடம்பெற்றுள்ள ‘வாத்தி கமிங்’ பாடலுக்கு கிண்டி பொறியியல் கல்லூரி மாணவர்கள் பலர் ஒன்றாக கேலரியில் நடனமாடி மற்ற கல்லூரி மாணவர்களுக்கு சேலஞ்ச் விடுத்துள்ளனர். இதன் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஆனால் படிக்க போன இடத்தில் இவ்வாறு சினிமா பாடலுக்கு நடனம் ஆடுவது முறையல்ல என்று அக்கல்லூரி மாணவர்களுக்கு நெட்டிசன்கள் அறிவுரை வழங்கி வருகின்றனர்.