கார்த்தி, ஜோதிகா மிரட்டும் ‘தம்பி’ படத்தின் டீசர் வெளியானது!
பாபநாசம் படத்தை இயக்கிய ஜீத்து ஜோசப் இயக்கத்தில் உருவாகும் இந்த த்ரில்லர் படத்தில் கார்த்தியும் ஜோதிகாவும் அக்கா – தம்பியாக நடித்துள்ளனர்.
‘கைதி’ படத்தை தொடர்ந்து நடிகர் கார்த்தியும் அவரது அண்ணியான நடிகை ஜோதிகாவும் இணைந்து தம்பி நடித்துள்ளனர் . பாபநாசம் படத்தை இயக்கிய ஜீத்து ஜோசப் இயக்கத்தில் உருவாகும் இந்த த்ரில்லர் படத்தில் கார்த்தியும் ஜோதிகாவும் அக்கா – தம்பியாக நடித்துள்ளனர்.
இதனால் முதன்முறையாகத் திரையில் இவர்களைப் பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். இந்தப் படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க மலையாள நடிகர் அன்சன் பால் இணைந்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஏப்ரல் மாதம் துவங்கியது.
இப்படத்தின் பஸ்ட்லுக் போஸ்டர் நேற்று வெளியான நிலையில் படத்தின் டீசரானது இன்று வெளியாகியுள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளில் வெளியாகும் இப்படத்தின் டீசரை தமிழில் சூர்யாவும், தெலுங்கில் நாகர்ஜூனாவும், மலையாளத்தில் மோகன்லாலும் வெளியிட்டுள்ளனர்.
I’m very happy that Jo & Karthi are sharing screen space! Here’s my #Thambi @Karthi_offl ‘s #ThambiTeaser https://t.co/v0q2ST5cjP#JeethuJoseph #Sathyaraj #SurajSadanah @Viacom18Studios @ParallelMinds9 @govind_vasantha @AndhareAjit @rdrajasekar @Nikhilavimal1 @LahariMusic
— Suriya Sivakumar (@Suriya_offl) November 16, 2019
த்ரில்லர், ஆக்ஷன், செண்டிமெண்ட் என உருவாகியுள்ள இப்படத்தின் டீசரில் கார்த்தியும் ஜோதிகாவும் தங்கள் நடிப்பால் மிரளவைத்துள்ளனர். இப்படம் வரும் டிசம்பர் 20ஆம் தேதி வெளியீடு படக்குழு திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.