காதல் சடுகுடுகுடு..!: வெட்கத்தில் குழையும் ஐஸ்; பங்கமாய் கலாய்க்கும் விஜி!

 

காதல் சடுகுடுகுடு..!: வெட்கத்தில் குழையும் ஐஸ்; பங்கமாய் கலாய்க்கும் விஜி!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஐஸ்வர்யாவுக்கு லவ் சர்ப்ரைஸ் கொடுத்து அசத்தியுள்ளார் பிக் பாஸ்.

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஐஸ்வர்யாவுக்கு லவ் சர்ப்ரைஸ் கொடுத்து அசத்தியுள்ளார் பிக் பாஸ்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் இறுதிப்போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இறுதி போட்டியாளர்களை குஷிப்படுத்தும் பல வகையில் சில விஷயங்களை பிக் பாஸ் செய்து வருகிறார். அதிலும் குறிப்பாக ஐஸ்வர்யாவை ஹாப்பியாக்க அவருக்கு ஒரு அட்டகாசமான சர்ப்ரைஸை பிக் பாஸ் இன்று கொடுக்கவிருக்கிறார்.

இது தொடர்பான புரொமோ வீடியோவில், பிக் பாஸின் முன்னாள்  போட்டியாளரும், ஐஸ்வர்யாவின் லவ்வர் பாயுமான ஷாரிக் கன்ஃபெஷன் ரூமில் ஐஸ்வர்யாவுக்காக காத்திருக்கிறார். ஷாரிக்கை எதிர்ப்பார்க்காத ஐஸ்வர்யா லவ் கலந்த மகிழ்ச்சியை மனதிற்குள் வைத்துக் கொண்டது அவரது முகத்தில் அப்பட்டமாக தெரிந்தது.

அதைத் தொடர்ந்து வீட்டிற்குள் வந்த ஷாரிக் மற்றும் நித்யாவை இறுதி போட்டியாளர்கள் வரவேற்றனர். ஐஸ்வர்யாவின் லவ் ஃபேஸை பார்த்த விஜி, இப்படி ஒரு ஐஸ்வர்யாவ இதுக்கு முன்னாடி பாத்ததே இல்லையேம்மா என்று கலாய்க்க, வெட்கத்தில் ஐஸ்வர்யாவின் முகம் சிவக்கின்றது.

இது ஐஸ்வர்யாவுக்கு மட்டுமின்றி பிக் பாஸ் ரசிகர்களுக்கும் வித்தியாசமான உணர்வை அளித்திருக்கிறது எனலாம். வழக்கமாக பொய் கூறுவது, ராட்சசியாக கத்துவது, அழுவது, சண்டை போடுவதுமாக திரிந்த ஐஸ்வர்யா காதல் புறாவாக பிக் பாஸ் வீட்டை சுற்றிவருவது நன்றாக தான் இருக்கிறது.

Shariq

ஆனால் ஷாரிக் என்ன  நினைக்கிறார் என்று தெரியவில்லையே!! மகத் யாஷிகாவை கலட்டிவிட்டது போல் ஐஸ்வர்யாவிடம், வி ஆர் ஜஸ்ட் ஃப்ரெண்ட்ஸ் என்று கூறி எஸ்கேப் ஆகிவிடுவாரா என்பது பிக் பாஸிற்கு அல்ல ஆண்டவனுக்கு தான் வெளிச்சம்.