கருப்பு பலூன் விடுபவர்கள் எல்லாம் ஒன்றாக இணையும் போது ரஜினியும் பாஜகவும் சேரக்கூடாதா? எஸ்.வீ.சேகர் கேள்வி!

 

கருப்பு பலூன் விடுபவர்கள் எல்லாம் ஒன்றாக இணையும் போது  ரஜினியும் பாஜகவும் சேரக்கூடாதா? எஸ்.வீ.சேகர் கேள்வி!

உலகில் தலை சிறந்த நடிகர். அவர் நடிக்காத பாத்திரங்களே  இல்லை. நடிகர் சங்கம் என்ற வார்த்தையில் நடிகர் என்பது சிவாஜியை குறிக்கும்.

சென்னை: ரஜினிகாந்தும் பாஜகவும் ஏன் சேரக்கூடாது என்று எஸ்.வி.சேகர் கேள்வி எழுப்பியுள்ளார்.

நடிகர் சிவாஜி கணேசனின் 92-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சென்னை அடையாறில் உள்ள சிவாஜி மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு நடிகர் எஸ்.வி.சேகர்  மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 

svs

இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ‘உலகில் தலை சிறந்த நடிகர். அவர் நடிக்காத பாத்திரங்களே  இல்லை. நடிகர் சங்கம் என்ற வார்த்தையில் நடிகர் என்பது சிவாஜியை குறிக்கும். ஆனால்  அவருக்கு மரியாதை செலுத்த நடிகர் சங்கத்திலிருந்து  இன்னும் யாரும் வராதது வருத்தத்தை அளிக்கிறது’ என்றார். 

modi

தொடர்ந்து பேசிய அவர், ‘ ரஜினி தேர்தலில் கலந்து கொண்டு போட்டியிடுவார். கண்டிப்பாக முதல்வராவார் என்பது என் கருத்து இல்லை.  கருப்பு பலூன் விடுபவர்கள் எல்லாம் ஒன்றாக இணையும் போது  ரஜினி ஏன்  பாஜகவுடன் கூட்டணி சேர கூடாது. திமுக போன்ற கட்சிகள் உண்மைக்கு மாறாக தகவல்களைப் பரப்பி வருகிறது’ என்றார்.