கனவு நிறைவேறியது… மம்முட்டி உடன் நடிப்பது பற்றி மஞ்சு வாரியர்

 

கனவு நிறைவேறியது… மம்முட்டி உடன் நடிப்பது பற்றி மஞ்சு வாரியர்

தன்னுடைய சினிமா வாழ்க்கையில் மம்முட்டியுடன் இணைந்து நடிக்க உள்ளேன் என்று மஞ்சு வாரியர் மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். தி ஸ்பிரீட் என்ற படத்தில் மம்முட்டியுடன் நடிக்க உள்ளார் மஞ்சு வாரியர். இந்த படத்தை ஜோபின் டி சாக்கோ இயக்குகிறார்.

மலையாள திரை உலகின் மெகா ஸ்டார் மம்மூட்டியுடன் நடிப்பது மலையாள ஹீரோயின்களின் கனவு. 1995ம் ஆண்டு மலையாள சினிமா உலகில் அறிமுகமாகி முன்னணி நடிகையாக வலம் வந்தும் கூட மம்மூட்டியுடன் நடிக்கவில்லை என்ற கவலை மஞ்சு வாரியாருக்கு இருந்து வந்தது. தற்போது அந்த கவலைக்கு முற்றுப்புள்ளி விழுந்துவிட்டது.


தன்னுடைய சினிமா வாழ்க்கையில் மம்முட்டியுடன் இணைந்து நடிக்க உள்ளேன் என்று மஞ்சு வாரியர் மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். தி ஸ்பிரீட் என்ற படத்தில் மம்முட்டியுடன் நடிக்க உள்ளார் மஞ்சு வாரியர். இந்த படத்தை ஜோபின் டி சாக்கோ இயக்குகிறார். மம்முட்டியுடன் இணைந்து எடுத்துக்கொண்ட படத்தை மஞ்சு வாரியர் தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டு, கனவு நிறைவேறியது என்று குறிப்பிட்டுள்ளார். 

mammootty

மம்முட்டியுடன் இணைந்து நடிக்கிறார் என்றாலும் ஜோடியாக நடிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்த படத்தில் பாதிரியார் வேடத்தில் மம்முட்டி நடிக்கிறார் என்று கூறப்படுகிறது. தன்னுடைய திரை வாழ்க்கையில் முதன்முறையாகப் பாதிரியார் வேடத்தில் மம்முட்டி நடிக்கிறார் என்றும் கூறப்படுகிறது. திரில்லர் வகையைச் சார்ந்த படமாக இது இருக்கும் என்று படக் குழுவினர் கூறுகின்றனர்.