‘ஒரு விரல் புரட்சி’ – சர்கார் படத்தின் இரண்டாவது சிங்கிள் இன்று ரிலீஸ்!
நடிகர் விஜய் நடிக்கும் சர்கார் படத்தின் இரண்டாவது சிங்கிள் ட்ராக் இன்று மாலை வெளியாகிறது.
சென்னை: நடிகர் விஜய் நடிக்கும் சர்கார் படத்தின் இரண்டாவது சிங்கிள் ட்ராக் இன்று மாலை வெளியாகிறது.
இயக்குநர் முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் தயாராகி வரும் திரைப்படம் ‘சர்கார்’. முருகதாஸ் – விஜய் கூட்டணியில் உருவாகும் மூன்றாவது படம் இது.
சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் , வரலட்சுமி சரத்குமார், ராதா ரவி, யோகி பாபு என பலர் நடித்து வருகின்றனர்.
இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். படத்தின் முதல் சிங்கிள் ட்ராக்கான ‘சிம்டாங்காரன்’ சமீபத்தில் வெளியாகி விஜய் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
நடிகர் விஜய் நடிக்கும் சர்கார் படத்தின் ‘ஒரு விரல் புரட்சி’ என்ற இரண்டாவது சிங்கிள் ட்ராக் இன்று மாலை வெளியாகும் 'சன் பிக்சர்ஸ்'#sarkar #SarkarSecondSingle #Sarkarkondattam #Sarkarsecondsingle #Oruviralpuratchi #SarkarsecondsingleOruViralPuratchi @SarkarMovieOffl @arrahman pic.twitter.com/idAUeTed0d
— toptamilnews (@toptamilnews) September 30, 2018
இந்நிலையில், இத்திரைப்படத்தின் இரண்டாவது சிங்கிள் ட்ராக்கான ‘ஒரு விரல் புரட்சி’ இன்று மாலை வெளியாகும் என சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவை சென்னையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி ஒன்றில் அக்டோபர் 2-ஆம் தேதி நடத்த திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.