ஒரு வழியாக எனை நோக்கி பாயும் தோட்டா படத்தின் அப்டேட் வெளியானது!
நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகிவரும் எனை நோக்கி பாயும் தோட்டா படத்தின் முக்கிய அப்டேட் வெளியானது
சென்னை: நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகிவரும் எனை நோக்கி பாயும் தோட்டா படத்தின் முக்கிய அப்டேட் வெளியானது.
இயக்குநர் கெளதம் மேனன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் எனை நோக்கி பாயும் தோட்டா. இதில் தனுஷுக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்துள்ளார். கடந்த 2016ம் ஆண்டு தொடங்கப்பட்ட படப்பிடிப்பு நீண்ட இடைவெளி விட்டு ஒருவழியாக கடந்த ஆண்டு நிறைவடைந்தது.
#ENPTUpdate– All set for Censor.
Should be done in a day or two. Will Definitely be Worth the *WAIT*, Thanking Everyone for Your *Patience*. ???— Madan (@Madan2791) February 14, 2019
இந்நிலையில் படத்தின் தயாரிப்பாளர் பி.மதன் தனது ட்விட்டர் பக்கத்தில் இப்படத்தின் அப்டேட் ஒன்று வெளியிட்டுள்ளார் அதில், எனை நோக்கி பாயும் தோட்டா திரைப்படம் சென்சாருக்கு விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளது. இன்னும் ஓரிரு நாட்களில் இந்த படத்தின் சென்சார் சான்றிதழ் கிடைத்துவிடும். மேலும் நீண்ட நாள் காத்திருப்புக்கு பயனாக ஒரு அருமையான படம் கிடைத்துள்ளது என்று கூறியுள்ளார்.
இப்படம் வருமா, வராதா என்று ஏக்கத்தில் இருந்த நிலையில் தற்போது வெளியான அப்படட்யை நினைத்து அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.