ஒரு வழியாக ஆதித்ய வர்மா பட ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு
நடிகர் துருவ் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள ஆதித்ய வர்மா படத்தின் ரிலீஸ் தேதி பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை: நடிகர் துருவ் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள ஆதித்ய வர்மா படத்தின் ரிலீஸ் தேதி பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தெலுங்கில் வெளியான அர்ஜுன் ரெட்டி படத்தை தமிழில் வர்மா என்ற பெயரில் பாலா இயக்கினார். ஆனால் அந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான E4 எண்டெர்டெய்ன்மென்ட்டுக்கு அது திருப்தி தராததால் வர்மா தூக்கி குப்பையில் வீசப்பட்டது.
அதைத்தொடர்ந்து மீண்டும் துருவ் விக்ரமை வைத்து, ஆதித்ய வர்மா என்ற பெயரில் கிரிசய்யா என்பவர் இந்த படத்தை இயக்கியுள்ளார். படத்தின் படப்பிடிப்பு குறித்து எந்த தகவலும் வெளியிடாமல் படக்குழு மிக ரகசியமாக வெய்துத்திருந்தனர். இதில் துருவ் விக்ரமுடன் இணைந்து பணிடா சந்து, பிரியா ஆனந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
On the auspicious day of Ganesh Chathurthi, we’d like to announce the release date of our film Adithya Varma.#AdithyaVarma is ready to conquer your hearts on November 8th!
Catch you later!
Happy Vinayaka Chathurthi@GIREESAAYA @cvsarathi @e4echennai @DhruvVikram8 @BanitaSandhu pic.twitter.com/AxSpW2He2f— E4 Entertainment (@E4Emovies) September 2, 2019
இந்த நிலையில் சமீபத்தில் படத்தின் படப்பிடிப்பு முடிவுயடைந்ததாக படக்குழு அறிவித்தது. அதைத்தொடர்ந்து இப்படம் வரும் தீபாவளி முடிந்து வரும் நவம்பர் 8ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. தீபாவளிக்குப் பெரிய ஹீரோ படம் வெளியாவதால் நிதானமாக படத்தை வெளியிடுகிறார்கள் போல…