என்னது தர்பார் சிங்கிள் டிராக் ஐயப்பன் பாடல் மெட்டிலிருந்து சுட்டதா? அட என்னப்பா சொல்லுறீங்க?!

 

என்னது தர்பார் சிங்கிள் டிராக் ஐயப்பன் பாடல் மெட்டிலிருந்து  சுட்டதா? அட என்னப்பா சொல்லுறீங்க?!

இப்படத்தில் ரஜினி ஆதித்யா அருணாச்சலம் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தர்பார் லைகா புரொடக்ஷன் தயாரித்து வரும் இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார் இப்படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். ரஜினிகாந்த் காவலராக நடித்துள்ள இப்படத்தில் ரஜினி ஆதித்யா அருணாச்சலம் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

TTN

இதையடுத்து  தர்பார் படத்தில் முதல் சிங்கிள் டிராக்  நேற்று வெளியாகி இணையத்தில் ட்ரெண்டிங்கானத.   நான்தான்டா இனிமேலு வந்து நின்னா தர்பாரு எனத் தொடங்கும் பாடலை பாடலாசிரியர் விவேக் எழுதியுள்ளார். பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் குரலில் மிரட்டும் விதமாக இந்த பாடல் அமைந்துள்ளது.

TTN

இந்நிலையில் அனிருத் இந்த பாடலுக்கான மெட்டை அய்யப்ப சுவாமி ஆல்பத்தில் இருந்து காப்பி அடித்துள்ளதாகச் சர்ச்சை எழுந்துள்ளது. ஆனால் இதை மறுத்துள்ள மற்றொரு தரப்பு, தேவா இசையில் வைகாசி பொறந்தாச்சு படத்தில்  தண்ணி குடம் எடுத்து தங்கம் நீ நடந்து வந்தா பாடல் மெட்டு இது என்று பதிலுக்கு கலாய்த்து வருகின்றனர்.

ANIRUD

ஏற்கனவே அனிருத் இசையில் ஹிட் அடித்த வொய் திஸ் கொலை வெறி  பாடல்,  இளையராஜாவின் வீட்டுக்கு வீட்டுக்கு வாசல்படி வேணும் பாடல் என்றும்  கோலமாவு கோகிலா படத்தின் பாடல் வெளிநாட்டு தொகுப்பில் இருந்து லாவகமாகச் சுடப்பட்டது என்றும் சர்ச்சை கிளம்பியது குறிப்பிடத்தக்கது.