‘உன்னால தர்ஷன் வெளியே போகல.. ஆனா சத்தியமா உன்னால தான் போனான்’ : வனிதாவை ட்ரோல் செய்த பிரபல காமெடி நடிகர்!
பிக் பாஸ் வீட்டுக்குள் மீண்டும் நுழைந்து கலவரத்தைத் தூண்டிய வனிதா குறித்து நடிகர் சதீஷ் கருத்து தெரிவித்துள்ளார்.
பிக் பாஸ் வீட்டுக்குள் மீண்டும் நுழைந்து கலவரத்தைத் தூண்டிய வனிதா குறித்து நடிகர் சதீஷ் கருத்து தெரிவித்துள்ளார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து எதிர்பாராத விதமாக தர்ஷன் வெளியேறினார். தர்ஷன் எவிக்ட் ஆனது பார்வையாளர்கள் மட்டுமல்ல கமலையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. தர்ஷன் வெளியேறியவுடன், வனிதா விஜயகுமார் டிவிட்டரில் , ஷெரின் தான் தர்ஷன் வெளியேறியதற்குக் காரணம் என்று பதிவிட்டார்.
இதைத் தொடர்ந்து நேற்று பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்த வனிதா ஹவுஸ்மேட்ஸ் முன்னிலையில், ‘தர்ஷன் நீ பழகுறத வைச்சு நான் அந்த வார்த்தையைச் சொன்னது. மக்களுக்கு நான் போன அப்போ புரியல. ரெண்டு வாரம் கழிச்சு புரிஞ்சிருக்கு. அதோட பிரதிபலிப்பு தான் தர்ஷன் வெளியே போனது’ என்று கூறினார். இதனால் பிக் பாஸ் வீட்டுக்குள் மீண்டும் வனிதாவால் சலசலப்பு ஏற்பட்டது. மேலும் வனிதாவின் இந்த பேச்சுக்கு ஷெரின் ஆதரவாளர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
Nee pannadhu thappu nu nan sollala… aana nee pannadhu thappu… Unnala tharshan veliya pogala.. but Sathyama unnala dhan veliya ponaar… Ellarum avanga opinion a sollunga… aana nan yaraiyum pesa vida maatten… ?? ???????????
— Sathish (@actorsathish) October 2, 2019
இந்நிலையில் நடிகர் சதீஷ் தனது டிவிட்டர் பக்கத்தில், ‘நீ பண்ணது தப்புனு சொல்லல. ஆனா நீ பண்ணது தப்பு, உன்னால தர்ஷன் வெளியே போகல.. ஆனா சத்தியமா உன்னால தான் வெளியே போனார். எல்லோரும் அவங்க கருத்தை சொல்லுங்க, ஆனா நான் யாரையும் பேச விடமாட்டேன்’ என்று பதிவிட்டு வனிதாவைக் கிண்டல் செய்துள்ளார்.