இனிமே ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் படம் எடுக்காதீங்க ஐயா! – தர்பாரை கிண்டல் செய்த ஐ.ஏ.எஸ் அதிகாரி!

இனிமே ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் படம் எடுக்காதீங்க ஐயா! – தர்பாரை கிண்டல் செய்த ஐ.ஏ.எஸ் அதிகாரி!

சத்தீஸ்கர் மாநிலத்தின் சுக்மா மாவட்ட ஆட்சியராக இருந்தபோது அலெக்ஸ் பால் மேனன் மாவோயிஸ்ட்டுகளால் கடத்தப்பட்டார். தமிழகத்தைச் சேர்ந்த அலெக்ஸ் பால் மேனனை விடுவிக்க தமிழகத்திலிருந்து மிகப்பெரிய அழுத்தம் கொடுக்கப்பட்டது. 12 நாள் பேச்சுவார்த்தைக்குப் பிறகு அவர் விடுவிக்கப்பட்டார். 

இனிமே ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் பின்புலத்தில் படங்களே எடுக்காதீர்கள் ஐயா என்று பிரபல ஐ.ஏ.எஸ் அதிகாரி அலெக்ஸ் பால் மேனன் ட்வீட் செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலத்தின் சுக்மா மாவட்ட ஆட்சியராக இருந்தபோது அலெக்ஸ் பால் மேனன் மாவோயிஸ்ட்டுகளால் கடத்தப்பட்டார். தமிழகத்தைச் சேர்ந்த அலெக்ஸ் பால் மேனனை விடுவிக்க தமிழகத்திலிருந்து மிகப்பெரிய அழுத்தம் கொடுக்கப்பட்டது. 12 நாள் பேச்சுவார்த்தைக்குப் பிறகு அவர் விடுவிக்கப்பட்டார். 

darbar-movie

அலெக்ஸ் பால் மேனன் தற்போது வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் தர்பார் படத்தை மறைமுகமாகக் கிண்டல் செய்து இரண்டு ட்வீட் வெளியிட்டுள்ளார். முதல் ட்வீட்டில், “நாளு நாளில் தலைவன் ஃபிட்னெஸ் நிரூபிக்க வச்சதுததான் தான்யா மிகப்பெரிய மனித உரிமை மீறல்” என்று குறிப்பிட்டு தர்பார், தலைவர் என்பதை ஹேஷ் டேக் செய்துள்ளார்.
இரண்டாவது ட்வீட்டில், “ஐயா, டேய் தமிழ் இயக்குநர்களா, இனிமே இந்த ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் பின்புலம் வைத்து எந்த படமும் எடுக்காதீங்க ஐயா. உங்க லாஜிக் ஓட்டைல எங்க மொத்த மூளையும் விழுந்து கிடக்குது” என்று குறிப்பிட்டுள்ளார். இதில் யாரையும் குறிப்பிடவில்லை, ஹேஷ் டேக் செய்யவில்லை.

ஆனால், தர்பார் படத்தில் ரஜினி போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். அதனால், மறைமுகமாக தர்பார் படத்தை அவர் கிண்டல் செய்திருப்பது தெரிகிறது. பல பிரபலங்களும் தர்பார் படம் பற்றி விமர்சித்து வருகின்றனர். தயாநிதி அழகிரி வெளியிட்டிருந்த ட்வீட்டில், படம் முதல் பாதி நன்றாக உள்ளது. காமெடி நன்றாக உள்ளது. ஆனால், திரைக்கதை சுவாரஸ்யமாக இல்லை என்று குறிப்பிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.