ஆதித்ய வர்மா படத்தில் இணைந்த யூடியூப் பிரபலம்!

 

ஆதித்ய வர்மா படத்தில் இணைந்த யூடியூப் பிரபலம்!

நடிகர் துருவ் விக்ரம் ஹீரோவாக அறிமுகமவிருக்கும் ஆதித்ய வர்மா படத்தில் யூடியூப் பிரபலம் அன்பு தாசன் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியானது. 

சென்னை: நடிகர் துருவ் விக்ரம் ஹீரோவாக அறிமுகமவிருக்கும் ஆதித்ய வர்மா படத்தில் யூடியூப் பிரபலம் அன்பு தாசன் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியானது. 

தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் கடந்த 2017ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘அர்ஜுன் ரெட்டி’. அப்படம் சூப்பர் ஹிட் ஆன நிலையில் தமிழில் இப்படத்தைப் பாலா ‘வர்மா’ என்ற டைட்டிலில் இயக்கினார். ஆனால் படம் எதிர்பார்த்த அளவுக்குத் திருப்தி தராததால் இப்படத்தை தயாரித்த இ4 என்டர்டெயின்மென்ட் கைவிட்டதாகவும் மேலும் புதிய படக்குழுவுடன் விரைவில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

dhruv

அதன்படி வர்மா என்ற டைட்டில் கொண்ட இப்படத்தின் பெயரை ஆதித்ய வர்மா என பெயர் மாற்றியமைத்தனர். இதை அர்ஜுன் ரெட்டி படத்தை இயக்கிய சந்தீப் வங்காவிடம் துணை இயக்குநராக பணியாற்றிய கிரிசய்யா இயக்குள்ளார். இதில் துருவ் விக்ரமிற்கு ஜோடியாக பாலிவுட் நடிகை பனிதா சந்து நடிக்கவுள்ளார். 

anbu thasan

மேலும் இதில் பிரியா ஆனந்த் நட்டிக்குள்ளதாகச் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அதையடுத்து தற்போது யூடியூப் மூலம் பிரபலமான அன்பு தாசன் ஒரு முக்கிய பாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இவர் ஏற்கனவே மிசைய முறுக்கு, கோலமாவு கோகிலா போன்ற படங்களில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.