அவென்சர்ஸ் எண்ட் கேம் படத்துக்கு இசையமைக்கும் ஏ.ஆர்.ரஹ்மான்
அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் ஹாலிவுட் திரைப்படத்தில் இடம்பெறும் சிறப்பு பாடலுக்கு இசையமைக்க ஏ.ஆர்.ரஹ்மான் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை: அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் ஹாலிவுட் திரைப்படத்தில் இடம்பெறும் சிறப்பு பாடலுக்கு இசையமைக்க ஏ.ஆர்.ரஹ்மான் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
ஹாலிவுட் சூப்பர் ஹீரோஸ் படமான ‘அவெஞ்சர்ஸ் சீரிஸ்’ உலகம் முழுவதும் பிரபலமானது. அப்படத்தின் 4-ம் பாகமான அவென்சர்ஸ் எண்ட் கேம் வரும் ஏப்ரல் 26-ம் தேதி வெளியுள்ளது. அயர்ன்மேன், தோர், கேப்டன் அமெரிக்கா, ஸ்பைடர்-மேன் எனப் பல படங்களின் சூப்பர் ஹீரோக்களின் கூட்டணியில் வெளியான படம் தான் அவெஞ்சர்ஸ்.
சமீபத்தில் வெளியான `கேப்டன் மார்வெல்’ உட்பட இதுவரை திரைக்கு வந்துள்ள 21 திரைப்படங்களின் இறுதிக்கட்டம் படம் தான் அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் . அதனாலேயே இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
கடந்த ஆண்டு வெளியான ‘அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார்’ படத்தின் நேரடித் தொடர்ச்சியாக இப்படம் இருக்கும். படத்தொடரின் சூப்பர் வில்லனான தேனோஸ், ‘இன்ஃபினிட்டி வார்’ படத்தின் இறுதியில், கிட்டத்தட்டப் பிரபஞ்சத்தின் பாதி மக்கள் தொகையை அழித்துவிட்ட நிலையில், இனி வரவிருக்கின்ற ‘எண்ட் கேம்’ படத்தில், அவெஞ்சர்ஸ் ‘சூப்பர் ஹீரோ கூட்டணி’ இறந்தவர்களை எப்படி மீண்டும் மீட்கப் போகிறார்கள் என்பதே கதைக் கருவாக இருக்கும் என ரசிகர்களால் நம்பப்படுகிறது.
தமிழில் மொழி மாற்றம் செய்யப்படும் இப்படத்திற்கு இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் வசனம் எழுத ஏற்கெனவே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
Thank you ? https://t.co/9USUSdRbMi
— A.R.Murugadoss (@ARMurugadoss) February 17, 2019
இந்நிலையில் இப்படத்தில் இடம்பெறும் சிறப்பு பாடலுக்கு இசையமைக்க ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். தமிழ், தெலுங்கு,ஹிந்தி என மூன்று மொழிகளிலும் தயாராகி வரும் இப்பாடல் வரும் ஏப்ரல் 1-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: நீச்சல் உடையில் கவர்ச்சி காட்டிய திஷா பதானியை வறுத்தெடுத்த நெட்டிசன்கள்!