அவன் ரத்தத்திலேயே ஸ்டைல் இருக்கு: நெகிழும் சவுந்தர்யா ரஜினிகாந்த்

 

அவன் ரத்தத்திலேயே ஸ்டைல்  இருக்கு: நெகிழும் சவுந்தர்யா ரஜினிகாந்த்

சவுந்தர்யா ரஜினிகாந்த்  மகன் வேத் புகைப்படம் ஒன்று தற்போது சமூகவலைதளங்களை ஆக்கிரமித்து உள்ளது. 

சென்னை:  சவுந்தர்யா ரஜினிகாந்த்  மகன் வேத் புகைப்படம் ஒன்று தற்போது சமூகவலைதளங்களை ஆக்கிரமித்து உள்ளது. 

rajini

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்- தின் இளையமகள் சவுந்தர்யாவுக்கும் தொழில் அதிபர் மகனும் நடிகருமான விசாகனுக்கும் கடந்த பிப்ரவரி 11-ம் தேதி   திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்குப் பிறகு,  பொன்னியின் செல்வன் வெப்சீரிஸில்  தீவிரமாக பணியாற்றி வரும் இவர் அடிக்கடி மகன் வேத் செய்யும் குறும்புகளையும்  தவறாமல் சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகிறார். 

 

இந்நிலையில் சவுந்தர்யா ரஜினிகாந்த் தனது சமூக வலைத்தள பக்கத்தில் வேத் புகைப்படம் ஒன்றைப் பதிவு செய்துள்ளார். அதில் வேத் கால்மேல் கால் போட்டு  காரில் உட்கார்ந்துள்ளார். மேலும் அந்த பதிவில், அவனுடைய ரத்தத்தில் ஸ்டைல் ரத்தம் உள்ளது என்று நினைக்கின்றேன், அதே ரத்தம் அப்படித்தான் இருக்கும் என்று கூறியுள்ளார். இந்த புகைப்படத்தைப் பார்த்த ரஜினி ரசிகர்கள் அதை வைரலாக்கி வருகின்றனர். 

vishagan

முன்னதாக வேத்திடம் விசாகன் கொஞ்சி விளையாடும் புகைப்படத்தை வெளியிட்ட சவுந்தர்யா ரஜினிகாந்த், இது தான் ஆசிர்வாதம்’ எனக் குறிப்பிட்டு டிவிட்டரில் பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

இதையும் வாசிக்க: சென்னைக்காக உணர்ச்சிவசப்படும் தோனிக்கு ஐபில் போட்டியில் தடை விதிக்க வேண்டும்: சேவாக்