அந்த பொண்ணை அடிக்க சொன்னது தவறு – மன்னிப்பு கேட்ட செல்வராகவன்

அந்த பொண்ணை அடிக்க சொன்னது தவறு – மன்னிப்பு கேட்ட செல்வராகவன்

கதை, திரைக்கதை, வசனம், இசை, ஒளிப்பதிவு, இயக்கம், பாடல்கள் – டி.ராஜேந்தர் எம்.ஏ என்ற டைட்டில் கார்ட் 80களில் பிரசித்தம். இரண்டாயிரமாவது ஆண்டுகளில் அச்சாதனைக்கு மீண்டும் சொந்தக்காரனாகும் ஆசையில், நடிப்பது மட்டுமன்றி பாடுவது, பாடல் எழுதுவது என தனுஷும் ஒரு ரவுண்ட் வர ஆசைப்பட்டு எழுதிய பாடல் வரிகள்

selvaraghavan

அடிடா அவளை, உதைடா அவளை, வெட்ரா அவளை

தனுஷ், ரிச்சா கங்கோபாத்யாய் (சார், ரிச்சா சார்) நடிப்பில். செல்வராகவன் இயக்கத்தில் வெளியான மயக்கம் என்ன படத்தில் இடம்பெற்ற பாடலின் வரிகள். ஒன்பது வருடங்கள் ஓடிவிட்டது படம் வெளியாகி. ஒரு இயக்குநராக அப்பாடல் வரிகள் இடம்பெற்றதில் தன் பங்கும் உண்டு என்றும், அதற்காக மன்னிப்பு கேட்பதாகவும் செல்வராகவன் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

makkayam enna

“சமூக பொறுப்புள்ள ஒரு இயக்குநர் இதனை கவனித்திருக்க வேண்டும், தடுத்திருக்க வேண்டும், கூடவே சேர்ந்து பாடி இருக்கக்கூடாது” என தவறை ஒப்புக்கொண்ட செல்வராகவன் பெரிய மனதுக்காரர். சால்ஜாப்பு சொல்லி இருந்தால்தான் தவறு. சரி விடுங்க சார், என்.ஜி.கேவுக்காக வெயிட்டிங்