மீண்டும் டிவிட்டரில் மோதும் விஜய்- அஜித் ரசிகர்கள்

 
துணிவு வாரிசு

வரும் பொங்கலுக்கு விஜய் நடித்த வாரிசு திரைப்படமும் அஜித் நடித்த துணிவு திரைப்படமும் வெளிவர உள்ளது.

Image

இந்நிலையில் கடந்த 31ஆம் தேதி துணிவு படத்தின் டிரைலர் வெளியாகி 24 மணி நேரத்தில் 30 மில்லியன் பார்வையாளர்களை பெற்றிருந்தது. இந்நிலையில் நேற்று விஜய் நடித்த வாரிசு திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி 24 மணி நேரத்தில் 25 மில்லியன் பார்வையாளர்கள் மட்டுமே பெற்றிருக்கிறது. இதை பயன்படுத்தி அஜித் ரசிகர்கள் #UnbeatableThunivuTrailer என்ற ஹாஸ்டாக்கை ட்ரெண்ட் செய்து ட்ரோல் செய்து வருகின்றனர்.

பதிலுக்கு விஜய் ரசிகர்களோ ட்ரெய்லர்களில் அதிக லைக்ஸ் பெற்றது வாரிசு தான் என்றும் கூறி ட்ரெண்ட் செய்து வருகின்றனர். துணிவு படத்தின் டிரைலர் 24 மணி நேரத்தில் 1.1 மில்லியன் லைக்ஸ்களை பெற்றிருந்த நிலையில் , வாரிசு படத்தின் டிரைலர் 1.8 மில்லியன் லைக்சுகளை பெற்று அசத்தியுள்ளதாக விஜய் ரசிர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் துணிவு திரைப்படம் யூட்யூபில்  விளம்பர ப்ரொமோஷன் செய்துள்ளது என்றும் அதனால் தான் அதிக வியூஸ்களை பெற்றுள்ளது என்றும் விஜய் ரசிகர்கள் டிவிட்டரில் வாதிட்டு வருகின்றனர். 

Image

இந்நிலையில் 24 மணி நேரத்தில் அதிக வீயூஸ்களை பெற்றது பீஸ்ட் திரைப்படம் தான் என்பதைக் குறிப்பிட்டு #RecordBreakingVarisuTrailer என்ற ஹாஸ்டாக்கை விஜய் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். இந்த நிலையில் வாரிசு மற்றும் துணிவு ஆகிய இரு திரைப்படங்களும் ஜனவரி 11ஆம் தேதி வெளியாகும் என்ற அதிகாரப்பூர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறிப்பிடதக்கது.