மாமியாருக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன விக்னேஷ் சிவன்

 
மாமியாருக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன விக்னேஷ் சிவன்

நடிகை நயன்தாராவின் தாய் ஓமனா குரியனின் பிறந்தநாளை முன்னிட்டு விக்னேஷ் சிவன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நடிகை நயன்தாராவின் தாய் ஓமனா குரியன் . அவர் ஓய்வு பெற்ற இந்திய விமானப்படை அதிகாரியான குரியன் கொடியாட்டு என்பவரை மணந்தார் . ஐக்கிய அரபு எமிரேட்ஸின் துபாயில் குடியேறிய இவர்களுக்கு லெனு குரியன் என்ற மகனும், நயன்தாராவும் உள்ளனர். தற்போது உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள ஓமனா குரியன், அவரது பூர்வீகமான கேரள மாநிலம் திருவல்லாவில் வசித்துவருகிறார். உடல்நல பாதிப்பு காரணமாக நயன்தாரா- இயக்குனர் விக்னேஷ் சிவன் திருமணத்தில் கூட ஓமனா குரியன் பங்கேற்கவில்லை.

இந்நிலையில் ஓமனா குரியன் பிறந்தநாளுக்கு இன்ஸ்டாகிராமில் வாழ்த்து தெரிவித்துள்ள விக்னேஷ் சிவன், “என் அத்தை அம்மாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். உங்களை மிகவும் நேரிக்கிறேன். நீங்கள் தான் எங்களின் மிகப்பெரிய பலம். உங்கள் பிரார்த்தனைகள் மற்றும் உங்கள் ஆசீர்வாதங்கள் எங்கள் வாழ்க்கையை மிகவும் அழகாக்குகிறது! நீங்கள் நீடூழி வாழ வேண்டும்” எனக் குறிப்பிட்டு அவருடன் இருக்கும் புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார்.