நடிகர் சிலம்பரசனுக்கு 'கவுரவ டாக்டர்' பட்டம் வழங்கும் வேல்ஸ் பல்கலைக்கழகம்

 
silambu

உலகெங்கிலுமுள்ள முன்னணி பல்கலைக்கழகங்கள், கலைத் துறையில் சாதனை படைத்த முன்னணி கலைஞர்களுக்கு ஆண்டுதோறும் 'கவுரவ டாக்டர்' பட்டம் கொடுப்பது வழக்கம். அந்த வகையில் எம்.ஜி.ராமசந்திரன், சிவாஜி கணேசன்,கமல்ஹாசன், விக்ரம், விஜய் உள்ளிட்ட பல்வேறு கலைஞர்களுக்கு இந்த பட்டம் வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது.

Silambarasan to start a charity for the welfare of society | Tamil Movie  News - Times of India

அந்த வரிசையில் முன்னணி கல்வி நிறுவனங்களில் ஒன்றான 'வேல்ஸ் பல்கலைக்கழகம்' நடிகர் சிலம்பரசன் வருகிற ஜனவரி 11-ஆம் தேதி ‘கவுரவ டாக்டர் ' பட்டம் கொடுத்து சிறப்பு செய்யவிருக்கிறது. பல்லாவரத்தில் உள்ள தனியார் நிகர்நிலைப் பல்கலைக்கழகம் சார்பில் இந்தப் பட்டம் பொங்கலுக்கு முன்னதாக வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 

இது குறித்து, வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் நிறுவனரும், தலைவரும் வேந்தருமான டாக்டர்.ஐசரி கே.கணேஷ், “மரியாதைக்குரிய நடிகர் சிலம்பரசன் டி.ஆர் அவர்களுக்கு இந்த கவுரவ டாக்டர் பட்டதைக் கொடுப்பதில் பெரும் மகிழ்ச்சியடைகிறோம். எங்கள் பல்கலைக்கழகத்தில் இந்த விருதுக்கு தகுதியான நபர்களைத் தேர்ந்தெடுப்பதற்கென்று ஒரு குழு இருக்கிறது. அவர்கள் பல்வேறு துறைகளிலும் சாதனை செய்யும் பிரபலங்களை கவனமாக ஆய்வு செய்து இறுதிப் பட்டியலை முடிவு செய்வார்கள். அந்தவகையில் ஆறு மாத குழந்தையாக இருக்கும் போதே திரைத்துறையில் நடிக்க வந்தவர் சிலம்பரசன்.விரைவில் அவருக்கு 39 வயது ஆகப்போகிறது. ஒருத்தரோட வயதும், அவரோட கேரியரும் ஒரே ஆண்டாக அமைவது அபூர்வம். அப்படியொரு ஆசிர்வதிக்கப்பட்ட கலைஞன்தான் சிலம்பரசன். நடிப்பு,இயக்கம், இசை, பாடகர் என சினிமாவில் பல்வேறு துறைகளிலும் இப்போதுவரை சாதனை படைத்து வரும் அவரின் சாதனையைக் கவுரவிப்பதன் பொருட்டே இந்த கவுரவ டாக்டர் என்கிற அங்கீகாரம்.அதை எங்கள் வேல்ஸ் பல்கலைக்கழகம் வழங்குவதில் எங்களுக்கு கூடுதல் மகிழ்ச்சி” என்கிறார்.

ஐசரி.கே.கணேஷ் வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் வேந்தராக இருந்தாலும் தனது, தந்தையின் வழித் தொடர்ச்சியாக தொடந்து திரைப்படங்களையும் தயாரித்து வருகிறார்.