ஸ்டார் திரைப்படத்திற்கு ‘யு’ சான்றிதழ்!

 
star

சின்னத்திரை நடிகராகன கவின் லிப்ட் படத்தின் மூலம் நாயகனாக கோலிவுட்டிற்கு அறிமுகமானார். அதை தொடர்ந்து, அவர் நடித்த டாடா திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.  இதைத்தொடர்ந்து, அவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவியத் தொடங்கின. 

ஸ்டார் திரைப்படத்திலிருந்து புகைப்பட ஆல்பம் வெளியானது

நடன இயக்குநர் சதீஸ் இயக்கத்தில் கவின் புதிய படத்தில் நடித்து வருகிறார். அதே போல, பியார் பிரேமா காதல் பட இயக்குநர் இலனுடம் ஸ்டார் என்ற திரைப்படத்தில் நடித்துள்ள கவின், அப்படத்தின் வெளியீட்டுக்காக காத்துக்கொண்டிருக்கிறார். 

யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ள ஸ்டார் திரைப்படத்திற்கு யு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இதனை டிவிட்டரில் தெரிவித்துள்ள இயக்குநர் இலன், மே 10 ஆம் தேதி வெளியாக உள்ள ஸ்டார் படத்தை பார்க்க குடும்பத்துடன் வாருங்கள் என அழைப்பு விடுத்துள்ளார்.

“U” vaangiyaachu , family oda vaanga⭐️#STARMOVIE on MAY 10th ⭐️https://t.co/fN1oMLz0gr pic.twitter.com/nuxHIi3Oo8

— Elan (@elann_t) May 6, 2024



கல்லூரி காதல் கதையாக உருவாகும் இப்படத்தில் லால், அதிதி போஹங்கர், ப்ரெய்ட்டி முகுந்தன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.