#Rewind2021 : இந்த ஆண்டு திருமணம் செய்துகொண்ட டாப் 25 பிரபலங்கள்...

 
திருமணம் திருமணம்

இந்த 2021 ஆம் ஆண்டை  பிரபலங்களின் திருமண ஆண்டு  என்றே சொல்லலாம்.  அந்த அளவிற்கு  பல பிரபலங்கள் இந்த ஆண்டு திருமணம் செய்துகொண்டுள்ளனர்.   அவர்களின் டாப் 25 பிரபலங்களை பற்றி பார்க்கலாம்..

பாலிவுட்:

1. கத்ரீனா கைப் - விக்கி கௌஷல்

கத்ரீனா கைப் - விக்கி கௌஷல்
பிரபல பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃபும், நடிகர் விக்கி கௌஷலும் கடந்த 2019ம் ஆண்டில் இருந்து காதலித்து வந்தனர். அண்மையில் டிசம்பர் 9 ஆம் தேதி இருவருக்கும் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் இருக்கும் ரிசார்ட் ஒன்றில்  பிரம்மாண்டமாக திருமணம் நடந்தது.

2. வருண் தவான் - நட்டாஷா தலால்

வருண் தவான் திருமணம்
பிரபல பாலிவு நடிகரான வருண் தவான், பள்ளிப்பருவ தோழியான நட்டாஷா தலாலை இந்த ஆண்டு ஜனவரி மாதம் 24 ஆம் தேதி திருமணம் செய்துகொண்டார்.

3. யாமி கௌதம் - ஆதித்யா தார்

யாமி கௌதம்
இந்தி , தமிழ் , தெலுங்கு ஆகிய மொழிகளில் நடித்து பிரபலாமானவர் யாமி கௌதம். இவர் பாலிவுட்  இயக்குநர் ஆதித்யா தார் என்பவரை கடந்த ஜூன் மாதம் 4 ம் தேதி திருமணம் செய்துகொண்டார். ஆதித்யா இயக்கிய ‘தி சர்ஜிக்கல் ஸ்டிரைக்’ படத்தில் நடித்தபோது இருவருக்கும் காதல் மலர்ந்ததை அடுத்து இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.

4. ராஜ்குமார் ராவ் - பத்ராலேகா

ராஜ்குமார்
பாலிவுட் திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் ராஜ்குமார் ராவ். இவர்  தான் 11 ஆண்டுகளாக காதலித்து வந்த தனது காதலி பத்ரலேகாவை கடந்த நவம்பர் மாதம் 15 ஆம் தேதி கரம் பிடித்தார்.

தென்னிந்திய பிரபலங்கள் :

5. நடிகை பிரணிதா - நிதின்

நடிகை பிரனிதா

தமிழில் அருள்நிதி நடிப்பில் வெளியான உதயன் படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் பிரணிதா. தொடர்ந்து சகுனி, மாஸ் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ள இவர் பெங்களூருவைச் சேர்ந்த தொழிலதிபர் நிதின் ராஜு என்பவரை  கடந்த மே மாதம்  30 ம் தேதி திருமணம் செய்துகொண்டார்.

6. கார்த்திகேயா - லோஹிதா ரெட்டி

கார்த்திகேயா திருமணம்
வில்லன் கதாப்பாத்திரங்களில் மிரட்டி வரும் பிரபல தெலுங்கு நடிகரான இவர், தற்போது அஜித் நடிப்பில் உருவாகிவரும் வலிமை படத்திலும் வில்லனாக நடித்திருக்கிறார். இவர் கடந்த நவம்பர் மாதம் 21 ஆம் தேதி ஹைதராபாத்தில் மிக பிரம்மாண்டமாக திருமணம் செய்துகொண்டார்.

7. கயல் ஆனந்தி- சாக்ரடீஸ்

கயல் ஆனந்தி திருமணம்
கயல் திரைப்படம் மூலம் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்த இவர், தொடர்ந்து பரியேறும் பெருமாள், கமலி போன்ற திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இவரும் இந்த ஆண்டு ஜனவரி மாதம் சாக்ரடீஸ் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

8. லிஜோமொல் ஜோஸ்

லிஜோமோல் ஜோஸ்
பிரபல மலையாள நடிகையான இவர் தமிழில் சிவப்பு பச்சை மஞ்சள், தீதும் நன்றும் ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்த ஜெய்பீம் படத்தில் செங்கனி கதாப்பாத்திரல் நடித்திருந்தார். இவர் கடந்த அக்டோபர் மாதம் 4ம் தேதி கேரளாவில் கிறிஸ்தவ முறைப்படி திருமணம் செய்துகொண்டார்.

9.  விஷ்ணு விஷால் -ஜுவாலா கட்டா

விஷ்ணு விஷால்
பிரபல தமிழ் நடிகர் விஷ்ணு விஷால் , பாட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா கட்டாவை இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டார். ஏற்கனவே தங்களது முதல் திருமணத்தை முறித்துக்கொண்ட இருவரும் இந்த ஆண்டு ஏப்ரல் 22 ஆம் தேதி திருமணம் செய்துகொண்டனர்.

10. கார்த்திக் குமார் - அம்ருதா ஸ்ரீனிவாசன்

கார்த்திக் குமார்
யாரடி நீ மோகினி, வெப்பம் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தவர்  கார்த்திக் குமார். இவர் தன்னை விட 16 வயது இளையவரான நடிகை அம்ருதா ஸ்ரீனிவாசனை இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டார். இவர் பிரபல பின்னணி பாடகி சுசித்ராவை முதலாவதாக  திருமணம் செய்திருந்தார்.. அவரை விவாகரத்து செய்த பின்னர் அம்ருதாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.  

11. வித்யூலேகா ராமன் - சஞ்சய்

வித்யூலேகா

ப.பாண்டி, வாசுவும் சரவணனும் ஒன்னா படிச்சவங்க உள்ளிட்ட பல  தென்னிந்திய திரைப்படங்களில் நடித்துள்ள நடிகை வித்யுல்லேகா ராமன், உடற்பயிற்சி நிபுணரான சஞ்சய் என்பவரை செப்டம்பர் 9ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார்.

12. தேசிங்கு பெரியசாமி - நிரஞ்சணி அகத்தியன்

இயக்குநர் தேசிங்கு பெரியசாமி
இயக்குநர் தேசிங்கு பெரியசாமி , இயக்குநர் அகத்தியனின் மகளும் நடிகையுமான நிரஞ்சணி அகத்தியனை பிப்ரவரி மாதம் 25 ஆம் தேதி திருமணம் செய்துகொண்டார்.

13. ஐஸ்வர்யா - ரோஹித்

aishwarya weds
பிரம்மாண்ட இயக்குநர் சங்கரின் மகள் ஐஸ்வர்யாவுக்கும்  2021 ல் திருமணம் முடிந்திருக்கிறது. இவர் கடந்த ஜூன் மாதம் ரோஹித் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

14. ஐஸ்வர்யா - அகுல்

ஐஸ்வர்யா பாஸ்கர்
பிரபல நகைச்சுவை நடிகர் எம்.எஸ்.பாஸ்கரின் மகள் ஐஸ்வர்யா, இந்த ஆண்டு ஜுலை மாதம் தொழிலதிபர் சுதாகர் சீனாவின் மகன் அகுல் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

சின்னத்திரை :

15. ராஷ்மி ஜெயராஜ் - ரிச்சு

rashmi jayaraj

நாம் இருவர் நமக்கு இருவர், ராஜபார்வை  உள்ளிட்ட தொடர்கள் மூலம் பிரபலமானவர் ராஷ்மி ஜெயராஜ்.  கன்னட சீரியல்களிலும் நடித்திருக்கும் இவர், கடந்த பிபரவரி மாதம் 10 ஆம் தேதி ரிச்சு என்பவரை கரம் பிடித்தார்.

16. மௌனிகா தேவி - விகே

மௌனிகா தேவி
அவளும் நானும், மகராசி உள்ளிட்ட சீரியல்கள் மூலம் பாப்புலரான மௌனிகா தேவி, கடந்த மே மாதம் விகே என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

17. சினேகன் - கன்னிகா

சினேகன் - கன்னிகா ரவி

பிரபல தமிழ் பாடலாசிரியரும் , பிக் பாஸ் புகழுமான  கவிஞர் சினேகன், நடிகை கன்னிகா ரவியை திருமணம் செய்துகொண்டார். தேவராட்டம், ராஜவம்சம் உள்ளிட்ட திரைப்படங்களிலும், கல்யாண வீடு தொடரிலும் நடித்து பிரபலமானவர் கன்னிகா ரவி.  பல ஆண்டுகளாக காதலித்து வந்த இந்த ஜோடி ஜூலை மாதம் 29 ஆம் தேதி கைகோர்த்தது.

18. ஷபானா - ஆர்யன்

ஷபானா ஆர்யன்
செம்பருத்தி சீரியல் மூலம் பிரபலமான ‘ஷபானா’, பாக்கியலட்சுமி தொடரில் நடித்து பிரபலமான ஆர்யன் என்கிற லேலு லஷ்மணன்  என்பவை நவம்பர் 15 ஆம் தேதி திருமணம் செய்துகொண்டார்.

19. மதன் பாண்டியன் - ரேஷ்மா

ரேஷ்மா மதன்
பூவே பூச்சூடாவா, அபி டெய்லர் தொடர்களின் மூலம் மக்களுக்கு நன்கு பரிட்சையமானவர்  ரேஷ்மாவும், மதன் பாண்டியனும்.. இந்த ஆண்டு தொடக்கத்தில் தங்கள்  காதலை வெளிப்படுத்திய இவர்கள், நவம்பர் 15 ஆம் தேதி கைகோர்த்தனர்.

20. சித்து - ஸ்ரேயா

சித்து ஸ்ரேயா

கலர்ஸ் தமிழ் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகி மக்களிடையே நல்ல அவரவேபை பெற்ற திருமணம் சீரியல் மூலம், ரசிகர்களின்  மணம் கவர்ந்த இந்த ஜோடி, நிஜ வாழ்க்கையிலும் ஜோடி சேர்ந்திருக்கிறார்கள். நவம்பர் 23 ஆம் தேதி இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.

21. வைஷாலி - சத்யதேப்

வைஷாலி சத்யதேவ்
கோகுலத்தில் சீதை, மகராசி தொடர்களில் நடித்து வருபவர் வைஷாலி. இவர் சீமராஜா, சர்க்கார் உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். இவரும் இந்த ஆண்டு சத்யதேவ் என்பவருடன் திருமண பந்தத்தில் இணைந்திருக்கிறார்.  

22. வைஷ்ணவி -ஜெய்

Actress Vaishnavi
பூவே பூச்சூடவா, யாரடி நீ மோகினி தொடார்களின் மூலம் பிரபலமானவர் நடிகை வைஷ்ணவி.. இவரும் இந்த ஆண்டு ஜெய் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

23. சஹானா ஷெட்டி - அபிஷேக்

சஹானா அபிஷேக்

அழகு சீரியல் புகழ் நடிகை சஹானா அவரது காதலர் அபிஷேக் என்பவரை கரம்பிடித்து இருக்கிறார். தற்போது தாலாட்டு சீரியலில் நடித்து வருகிறார். இயக்குநர் பாலாவின் தாரை தப்பட்டை படத்திலும் நடித்திருக்கிறார்.  இவருக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் திருமணம் நடைபெற்றது.

24. தீபக் குமார் - அபிநவ்யா

தீபக் குமார் - அபிநவ்யா

என்றென்றும் புன்னகை  சீரியல் மூலம்  பாப்புலரான தீபக் குமார் தனது காதலி அபி நவ்யாவை கரம் பிடித்திருக்கிறார். ஜர்னலிட்ஸாக பணியாற்றிய அபிநவ்யா பிரியமானவள், கண்மணி தொடர்களில் நடித்திருக்கிறார். தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் சித்திரம் பேசுதடி, கயல் தொடரில் நடித்து வருகிறார்.

25 . நக்‌ஷத்ரா நாகேஷ் - ராகவ்

நட்சத்திரா நாகேஷ்
பிரபல தொகுப்பாளினியும்,  லட்சுமி, நாயகி, தமிழும் சரஸ்வதியும் சீரியல்களின்  நடிகையுமான  நக்‌ஷத்ரா நாகேஷ் இந்த மாதம் , ராகவ் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

26. கவிதா - சந்தன் குமார்

கவிதா - சந்தன் குமார்
கன்னட நடிகையான கவிதா கவுடா தமிழில், மகாபாரதம், நீலி ஆகிய தொடர்களிலும், கன்னடத்தில் ஒரு சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். தற்போது கவிதா தன்னுடன் சீரியலில்ந் நடிக்கும் சக நடிகரான சந்தன் குமாரை திருமணம் செய்துகொண்டுள்ளார்.