வீட்டின் முன்பு குவிந்திருந்த ரசிகர்கள் ஆரவாரம்.. பொங்கல் வாழ்த்து தெரிவித்த ரஜினி.. வைரலாகும் வீடியோ..

 
“ரஜினி மக்கள் மன்றம் கலைப்பு” – உதயத்திற்கு முன்பே அஸ்தமனமான “சூப்பர்ஸ்டாரின்” அரசியல் பிரவேசம்!

பொங்கல் பண்டிகையை ஒட்டி ரஜினி தனது வாழ்த்துக்களை தெரிவித்திருக்கிறார். தொடர்ந்து வீட்டின் முன்பு குவிந்து ரசிகர்களுக்கு கை காட்டி அவர் பொங்கல் வாழ்த்து தெரிவித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

கடுப்பேத்துறார் மை லார்ட்…”ரஜினி அரசியல் பிரவேசமும் அலப்பறைகளும்” :  பிரஸ்மீட்டின் பரிதாபங்கள்!

புத்தாண்டு, தீபாவளி, பொங்கல் என எந்த பண்டிகைகள் வந்தாலும், ரஜினியின் பிறந்தாளின்போதும் அவருக்கு வாழ்த்து தெரிவிக்க  ஏராளமான ரசிகர்கள் ரஜினியின் வீட்டின் முன்பு  திரண்டுவிடுவது வழக்கம்.. அவர்களை சந்தித்து ரஜினிகாந்தும் வாழ்த்துக்களை பெற்று கொண்டும், வாழ்த்துக்களை தெரிவித்தும் வருவார். அதேபோல் வருடத்திற்கு ஒரு முறை தனது பிறந்தநாளை முன்னிட்டு சென்னையில் தனது ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொள்வார். ஆனால் கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக தனது ரசிகர்களை அவர் சந்திக்காமல் இருக்கிறார்.

ரஜினி வாழ்த்து

இந்நிலையில் இன்று பொங்கல் பண்டிகையை ஒட்டி, , காலை  முதலே ஏராளமான ரசிகர்கள்  அவரது வீட்டின் முன்பு ரஜினிக்கு வாழ்த்து தெரிவிக்க காத்திருந்தனர். அப்போது ரசிகர்களைக்  காண நடிகர் ரஜினிகாந்த்  வீட்டிலிருந்து வெளியே வந்தார். கேட்டுக்கு முன்பாகவே உள்பக்கம் இருந்தவாறே நாற்காலி மீது ஏறி நின்று  ரசிகர்களுக்கு  பொங்கல் வாழ்த்து  தெரிவித்தார்.   தொடர்ந்து கை அசைத்து வணக்கம் சொல்லி ரசிகர்களின் வாழ்த்துக்களையும் ஏற்றுக்கொண்டார்.  அப்போது ரசிகர்கள்  தலைவா தலைவா  என்றெல்லாம் ஆரவாரம் செய்தனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

முன்னதாக தனது ட்விட்டர் பக்கத்தில் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ள அவர், “அனைவருக்கும் வணக்கம்,,, ஒரு கஷ்டமான , ஒரு ஆபத்தான சூழ்நிலையிலே வாழ்ந்திட்டிருக்கோம்..

இந்த கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகமாகிட்டிருக்கு. இதுலேருந்து நம்மைக் காப்பாற்றிக் கொள்ள எல்லா கட்டுப்பாடுகளையும், எல்லா நியமங்களையும் கண்டிப்பாக கடைபிடிங்க..  ஆரோக்கியத்துக்கு மிஞ்சினது எதுவுமே கிடையாது... அனைவருக்கும் என்னுடைய பொங்கல் நல்வாழ்த்துகள்.” என்று குறிப்பிட்டுள்ளார். 

ரஜினி பொங்கல் வாழ்த்து