மாஸ்டர் படத்தை வெளிநாட்டில் ரிலீஸ் செய்வதில் சிக்கல்… சோகத்தில் வெளிநாடுவாழ் இந்தியர்கள்!

 

மாஸ்டர் படத்தை வெளிநாட்டில் ரிலீஸ் செய்வதில் சிக்கல்… சோகத்தில் வெளிநாடுவாழ் இந்தியர்கள்!

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள திரைப்படம் மாஸ்டர். இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் போஸ்டர் புரொடக்ஷன் முடிந்து தயாரான நிலையில் இந்தாண்டு ஏப்ரல் மாதம் வெளியாக இருந்தது. ஆனால் கொரோனா காரணாமாக படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது. இதை தொடர்ந்து இப்படம் ஓடிடியில் வெளியாகும் என இணையத்தில் செய்திகள் உலா வந்தன. ஆனால் நிச்சயம் மாஸ்டர் திரைப்படம் ஓடிடியில் வெளியாகாது என படக்குழுவினர் தெரிவித்தனர்.

மாஸ்டர் படத்தை வெளிநாட்டில் ரிலீஸ் செய்வதில் சிக்கல்… சோகத்தில் வெளிநாடுவாழ் இந்தியர்கள்!

இதனிடையே படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மாஸ்டர் திரைப்படம் பொங்கல் பண்டிகையையொட்டி வரும் ஜனவரி 13-ஆம் உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாகவிருந்தது. ஆனால் தற்போது ஐரோப்பிய நாடுகளில் உருமாறிய கொரோனா தலைத்தூக்கியிருப்பதால் அங்கு மீண்டும் முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கொரோனா பரவல் காரணமாக திரையரங்குகள் திறக்கப்படாத சூழலில் பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் மாஸ்டர் திரைப்படம் வெளியாவது கேள்விக்குறியாகியுள்ளது. இதனால் வெளிநாடுவாழ் இந்தியர்களும் விஜய் ரசிகர்களும் ஏமாற்றமடைந்துள்ளனர்.

இந்தியாவில் படம் வெளியாவது போன்று வெளிநாடு வாழ் இந்தியர்களும் மாஸ்டர் படத்தை கண்டுகளிக்க மாற்று வழி ஏதேனும் படக்குழுவினர் யோசித்துள்ளார்களா என்பது குறித்து இதுவரை தகவல் ஏதும் வெளியாகவில்லை. விஜய் நடிப்பில் உருவான படம் இவ்வளவு நாட்களுக்கு பின் வெளியாவது இதுவே முதல்முறை. நடிகர் விஜய் ரசிகர்களை ஏமாற்றாமல் ஏதேனும் மாற்றுவழியை படக்குழுவினருக்கு வழங்குவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.