`லியோ' படத்தின் வெற்றி விழா கொண்டாட்டத்திற்கு அனுமதி

 
லியோ படத்தால் ஏற்பட்ட நெரிசல்... ரசிகர்கள் மீது அபராதம் விதிப்பு...

நடிகர் விஜய் நடித்து வெளியான லியோவின் வெற்றி விழா நாளை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற காவல்துறை தரப்பில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘லியோ’ திரைப்படம் உலகம் முழுவதும் 500 கோடி ரூபாய் வசூலை நெருங்கியுள்ளது. படம் வெளியாவதற்கு முன்பும் பின்பும் பல சர்ச்சைகள் எழுந்தது. படத்தின் இரண்டாம் பாதிக்குக் கிடைத்த கலவையான விமர்சனத்தையும் லோகேஷ் கனகராஜ் ஏற்றுக் கொண்டார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘லியோ’ திரைப்படம் கடந்த அக்டோபர் 19-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்திருந்த இப்படத்துக்கு அனிருத் இசையமைத்திருந்தார். படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், மன்சூர் அலி கான், பிரியா ஆனந்த், மிஷ்கின், கவுதம்வாசுதேவ் மேனன், மடோனா, சாண்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்நிலையில் படத்தின் வெற்றி விழாவை நவம்பர் 1- ம் தேதி சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய் கலந்து கொள்ளும் இந்த விழாவுக்கு பாதுகாப்பு கோரி காவல்துறைக்கு படத் தயாரிப்பாளர் கடிதம் எழுதியுள்ள நிலையில், அதற்கு காவல்துறை அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. விழா நடத்த நிபந்தனைகளுடன் தடையில்லா சான்றிதழ் வழங்கியது காவல்துறை. இதன் மூலம் நாளை மறுநாள் ‘லியோ’ வெற்றிவிழா நடைபெறும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.