புதிய படங்களுக்கு இலவச டிக்கெட்... அசத்தும் ஓடிடி தளம்...

 
Free Movie Tickets

உலகளவில் கொரோனா வைரஸ் ஏற்படுத்திய தாக்கம் , ஓடிடி தளங்களுக்கு தனி மவுசை ஏற்படுத்தியிருக்கிறது என்றே சொல்லலாம்.  அதற்கு முன்னதாகவே இணைய தொடர்கள், டிஜிட்டல் தளங்களுக்கு வரவேற்பு இருந்தாலும், கொரொனா ஊரடங்கு நாட்களில் மக்களின் பொழுது போக்கிற்கு  ஓடிடி தளங்கள் பெரும் பங்கு வகித்தன.  ஏராளமான திரைப்படங்கள் நேரடியாக ஒடிடி தளங்களிலேயே வெளியாகின..  நெட்ஃபிலிக்ஸ், அமேசான், ஹாட்ஸ்டார் என பிரபல ஒடிடி தளங்களில் வெளியாகும் வெப் சீரிஸ்களுக்கு உக்லகளவில் லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இதை காரணமாகக் கொண்டே புதிது புதிதாக ஓடிடி தளங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன.

OTT

அந்தவகையில் அமெரிக்காவின் பிரபல பொழுதுபோக்கு நிறுவனமான எமோஷனல் என்டர்டெயின்மென்ட் நெட்வொர்க் ’தியேட்டர் கூட்ஸ் டாட் காம்’ - theatre Goods.com என்ற  புதிய ஓடிடி  தளம்  உருவாக்கியிருக்கிறது. வரும் ஜனவரி 15-ஆம் தேதி முதல் இந்த புதிய ஓடிடி தளம் செயல்பாட்டுக்கு வரும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்த புதிய ’theatre Goods.com’ ஒடிடி தளத்தில் புதிய படங்களுக்கான டிக்கெட்டுகளை இலவசமாக பெறலாம் என அறிவித்துள்ளனர்.  இந்த ஓடிடி இணையதளத்தின் மூலம் பயனாளர்களுக்கு உலகத்தரம் வாய்ந்த படைப்புகளை வழங்க இருப்பதாக, அந்நிறுவன தலைவர் ரசாத் வசீகரன் தெரிவித்துள்ளார்.

theatre

 மேலும்,5 ஆயிரத்திற்கும்  மேற்பட்ட இந்திய பிராந்திய மொழிகள் உள்ளடக்க  நூலகத்தையும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட படங்கள் மற்றும் வெப்சீரிஸ்களை உருவாக்கி வருவதாகவும் அவர் கூறினார். தற்போது மிகக்குறைவான திரைப்படங்களை ஓடிடியில் வெளியாகி வருகின்றன என்றும் பெரிய பட்ஜெட் படங்கள் பெரும்பாலும் திரையரங்குகளிலேயே  வெளியிடப்படுவதாக கூறிய அவர், சினிமா ரசிகர்கள் ஓடிடி தளங்களில் புதிய படங்களை பார்க்க 30 முதல் 45 நாட்கள் வரை காத்திருக்கின்றனர். இந்த இடைவெளியை போக்க  தியேட்டர்களில் வெளியாகும் புதிய படங்களுக்கான இலவச டிக்கெட்டுகளையும் இந்த ஓடிடி  இணையதளத்தில் வழங்குகிறோம் என்று கூறினார்.