பிரபல இசையமைப்பாளர் பிரவீன் குமார் திடீர் மரணம் - அதிர்ச்சியில் திரையுலகம்!!

 
tn

பிரபல இசையமைப்பாளர் பிரவீன் குமார் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு இன்று காலமானார் . அவருக்கு வயது 28.

tn

'இராக்கதன்', 'மேதகு'போன்ற படங்களுக்கு இசையமைத்தவர் பிரவீன்குமார். இவருக்கு மஞ்சள் காமாலை தொற்று ஏற்பட்டதாக தெரிகிறது . இதன் காரணமாக இவர் தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் மஞ்சள் காமாலை நோய் தீவிரமடைந்த நிலையில் பிரவீன் குமார் இன்று காலை 6.30  மணி அளவில் உயிரிழந்துள்ளார். 

death

இது தொடர்பாக அவர் நண்பன் மன்னை  சாதிக் வெளியிட்ட வீடியோவில்,   பிரவீன் மஞ்சள் காமாலை இருந்ததை கவனிக்கவில்லை. தெரியாமலேயே அவர் இருந்திருக்கிறார். அவரை தஞ்சாவூரில் உள்ள மருத்துவமனையில் சேர்த்து இரண்டு நாட்கள் ஆகிவிட்டன. அவசர சிகிச்சை பிரிவில் வைத்து சிகிச்சை அளித்துக் கொண்ட நிலையில் அவர் தற்போது உயிரிழந்துள்ளார்.  எந்த ஒரு தவறும் செய்யாதவன். எந்த ஒரு விஷயத்திலும் பெரிதாக தலையிடாதவன் .தயவுசெய்து உங்கள் உடலை நன்றாக சோதனை செய்து கொள்ளுங்கள். காரணம் என்னவென்றால், நம் உடலுக்குள்ளே என்ன இருக்கிறது என்று நமக்கு தெரியாது. நீங்கள் அரசு மருத்துவமனைக்கு சென்று சோதனை செய்து கொண்டாலே, உங்கள் உடலில் என்னென்ன பிரச்சினைகள் இருக்கும் என்பதை கண்டுபிடித்து விடுவார்கள் என்று குறிப்பிட்டுள்ளார். இசையமைப்பாளர் பிரவீன் குமாரின் திடீர் மரணம் தமிழ் திரையுலகினரை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.