மார்க் ஆண்டனி படத்தின் இயக்குனருக்கு BMW காரை பரிசளித்த தயாரிப்பாளர்

 
மார்க் ஆண்டனி

நடிகர் விஷாலின் மார்க் ஆண்டனி திரைப்படம் வெற்றி பெற்ற நிலையில், இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனுக்கு தயாரிப்பாளர் வினோத் குமார் புதிய BMW காரை பரிசளித்தார்.

நடிகர் விஷாலின் 33-வது படமாக 'மார்க் ஆண்டனி' திரைப்படம் கடந்த செப்டம்பர் 15-ம் தேதி  வெளியானது. திரிஷா இல்லனா நயன்தாரா, அன்பானவன் அசராதவன் அடங்காதவன், பஹீரா ஆகிய படங்களை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இந்த படத்தை இயக்கி இருந்தார்.


விஷாலுக்கு ஜோடியாக ரித்து வர்மா நடிக்க, செல்வராகவன், தெலுங்கு நடிகர் சுனில், மலேசிய நடிகர் டிஎஸ்ஜி, நடிகை அபிநயா ஆகியோரும் நடித்திருந்தனர். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்திருந்தார். எஸ் ஜே சூர்யாவின் நடிப்பும், ஜிவி பிரகாஷ் குமாரின் பின்னணி இசையும் சேர்த்து அட்டகாசமாக டைம் ட்ராவல் கதையால்  படத்துக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து, ரசிகர்களின் வரவேற்பை பெற்ற இப்படம்  100 கோடி ரூபாய்க்கு மேல் வசூலையும்  வாரிக் குவித்தது.

நடிகர் விஷாலின் சினிமா வாழ்க்கையில், 100 கோடி ரூபாய் வசூல் செய்த முதல் திரைப்படம் என்ற பெருமையும் மார்க் ஆண்டனி பெற்றது. இந்நிலையில் மிகப்பெரிய வெற்றி படமாக ஏற்படுத்திக் கொடுத்த இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனுக்கு படத்தின் தயாரிப்பாளர் வினோத்குமார் புதிய BMW காரை பரிசளித்துள்ளார். நடிகர் அஜித் குமாரின் தீவிர ரசிகரான இவர் இப்படத்தின் வெற்றியின் மூலம்  அடுத்து அஜித் குமாரை இயக்கு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.