“fitness வேணும் -போதை வேணாம்” -பாலிவுட் நடிகர் அமீர்கான்  இளைஞர்களுக்கு அறிவுரை 

 

“fitness வேணும் -போதை வேணாம்” -பாலிவுட் நடிகர் அமீர்கான்  இளைஞர்களுக்கு அறிவுரை 

பாலிவுட் நடிகர் அமீர்கான், சமீபத்தில் தமிழகத்தின் ராமநாதபுரம் மாவட்டத்தில் திரைப்பட படப்பிடிப்பிற்காக வந்திருந்தார், மாவட்டத்தில் உள்ள இளைஞர்களுக்கு ஒரு சிறப்பு செய்தியை அவர் சொன்னார் . கடலோர மாவட்டத்தின் முக்கிய பிரச்சினையான போதைப்பொருட்களிலிருந்து விலகி இருக்குமாறு மாவட்ட காவல்துறை தலைவரின் ஆலோசனையின் பேரில் நடிகர் கேட்டுக்கொண்டார் .

amir

ஒரு வீடியோ செய்தியில், “அனைவருக்கும் வணக்கம், நான் உங்கள் எஸ்.பி. வருணுடன் ராமநாதபுரத்தில்  இருக்கிறேன். நாங்கள் இப்போதுதான் பேசிக்கொண்டிருந்தோம், அவர்கள் இங்கு எதிர்கொள்ளும் ஒரு பெரிய பிரச்சினை போதைப்பொருள், போதைப்பொருள் இளைஞர்களை  அடிமையாக்கிவிடும் . இதன் விளைவாக அவர்கள் தங்கள் வாழ்க்கையை வீணடித்து தங்கள் வாழ்க்கைக்கு தீங்கு விளைவிக்கின்றனர். உங்கள் வாழ்க்கைக்கு  தீங்கு விளைவிக்கும் அனைத்து வகையான  போதைப்பொருட்களிலிருந்து விலகி இருக்க வேண்டும் என்பதே எனது உண்மையான வேண்டுகோள். “




 

அவர் தொடர்ந்து கூறினார், “நமக்கு  ஒரு வாழ்க்கை கிடைத்திருக்கிறது, இது ஒரு பரிசு, அதை நாம் முழுமையாக வாழ வேண்டும், அதை நாம் அனுபவிக்க வேண்டும். நாம்  மக்களை மகிழ்ச்சியடையச் செய்ய வேண்டும், நம்  அன்புக்குரியவர்களை மகிழ்ச்சியடையச் செய்ய வேண்டும்.. எனவே எல்லா இளைஞர்களுக்கும் எனது வேண்டுகோள் போதைப்பொருட்களிலிருந்து விலகி இருக்க வேண்டும். ”

amir

உடற்தகுதி என்பது ஒருவரின் வாழ்க்கையில் மகிழ்ச்சியைக் கொண்டுவருவதற்கான சிறந்த வழியாகும் என்றும் அவர் கூறினார். “நீங்கள் fit ஆக  இருக்கும்போது, உங்கள் வாழ்க்கையின்  எல்லாவற்றையும் அனுபவிக்கிறீர்கள். எனவே fit ஆக  இருங்கள், போதைப்பொருட்களிலிருந்து விலகி இருங்கள் ”என்று நடிகர் கூறினார்.