பிரபல இயக்குநர் கேயார் மனைவி காலமானார்

 

பிரபல இயக்குநர் கேயார் மனைவி காலமானார்

தமிழ் திரையுலகின் பிரபல இயக்குனரும் தயாரிப்பாளருமானவர் கேயார். இவரின் மனைவி இந்திரா உடல்நலக்குறைவால் காலமானார்.

பிரபல இயக்குநர் கேயார் மனைவி காலமானார்

ஈரமான ரோஜாவே, இரட்டைரோஜா , மாயாபஜார், அலெக்சாண்டர், காதல் ரோஜாவே உள்ளிட்ட படங்களை இயக்கியவர் கேயார். தயாரிப்பாளராகவும், திரைப்பட விநியோகஸ்தராகவும் இருந்திருக்கிறார். தென்னிந்திய தயாரிப்பாளர் சங்கத் தலைவராகவும் பதவி வகித்து வந்தார்.

திரைப்பட வர்த்தக சபை, தயாரிப்பாளர் அறக்கட்டளை உள்ளிட்டவர்களும் முக்கிய பொறுப்புகளை வகித்து வந்தவர்.

பிரபல இயக்குநர் கேயார் மனைவி காலமானார்

கேயார் மனைவி. இவருக்கு ஒரு மகன் 3 மகள்கள் உள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு கேயாரின் மனைவி இந்திராவுக்கு சிறுநீரக கோளாறு ஏற்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் இன்று தகவல் தெரிவித்திருக்கிறது. இதையடுத்து இந்திராவின் உடல் பொதுமக்கள் மற்றும் திரையுலகினர் அஞ்சலிக்காக சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருக்கிறது. நாளை மாலையில் இறுதிச்சடங்கு நடைபெறும் என்பதை தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

மனைவியை இழந்து வாடுகின்ற கேயாருக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் ஆறுதல் சொல்லி அவரை தேற்றி வருகின்றனர்.