#JUSTIN பாலியல் புகாரில் டான்ஸ் மாஸ்டர் ஜானி கைது!

 
Jani Master

பாலியல் புகாரில் சிக்கி தலைமறைவாக இருந்த பிரபல நடன இயக்குநர் ஜானி மாஸ்டர் பெங்களூரில் கைது செய்யப்பட்டுள்ளார்.   

Jani Master

தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடன இயக்குநராக இருந்து வருபவர் ஷேக் ஜானி பாஷா.  பரவலாக ஜானி மாஸ்டர் என அழைக்கப்படும்  இவர் தமிழில் விஜய், தனுஷ் உள்ள்ட்டவர்களுடன் நடன இயக்குநராக பணியாற்றியுள்ளார்.  குறிப்பாக இவர் இயக்கிய ‘காந்த கண்ணழகி’, ‘ரஞ்சிதமே ரஞ்சிதமே’, ‘காவாலய்யா’, ‘ஹலமதி ஹபிபோ’, ‘ ஜாலியோ ஜிம்கானா’,  ‘மேகம் கருக்காதோ பெண்ணே பெண்ணே’, ‘ஸ்ரீவல்லி’ பாடல்களின் நடனம் ரசிகர்களிடையே மிகப்பிரபலம்.  அத்துடன் ‘மேகம் கருக்காதோ’ பாடலுக்கு அண்மையில் இவருக்கு தேசிய விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.  

Image

இந்நிலையில் இவரிடம்  உதவி நடன இயக்குநராக பணியாற்றி வரும்,  21 வயது இளம் பெண்ணை தொடர்ந்து பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணே ‘தன்னை 16 வயதிலிருந்து பாலியல் பலாத்காரம் செய்து வந்ததாக’ போலீஸில் புகார் அளித்திருந்தார்.  சைபராபாத்தில் உள்ள ராய்துர்கம் காவல் நிலையத்தில் அவர் அளித்த புகாரில், “நான் ஜானி மாஸ்டருடன் சில திரைப்படங்களில் பணியாற்றினேன். படப்பிடிப்புக்காக நான் அவருடன் சென்னை, மும்பை, ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களுக்கு சென்ற போது என்னை அவர் பல முறை பலாத்காரம் செய்துள்ளார். அது போல் ஹைதராபாத்தில் நான் வசிக்கும் நார்சிங்கி பகுதியில் உள்ள வீட்டில் வைத்தும் அவர் என்னை பலாத்காரம் செய்துள்ளார்” இவ்வாறு புகார் அளித்துள்ளார்.  

Image
 
 இதனையடுத்து இளம்பெண்ணின் புகாரின் அடிப்படையில் டான்ஸ் மாஸ்டர்  ஜானி மீது  வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த செய்திகள் ஊடகங்களில் வெளியான நிலையில்  ஜானி தலைமறைவானார். அவரை போலீஸார் தேடி வந்தனர். இதனிடையே பாதிக்கப்பட்ட பெண்ணிக்கு உரிய நியாயம் கிடைக்க வேண்டும் என சமூக வலைதளங்களில் பலரும் வலியுறுத்தி வந்தனர்.  இந்த நிலையில்  ஜானி மாஸ்டர் பெங்களூரில் பதுங்கியிருந்ததாக தகவல் கிடைத்ததை அடுத்து, அவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.