‘நிஜத்த எவ்ளோ ஆழமா பொதச்சாலும், அது திமிரிக்கிட்டு வெளிய வந்தே தீரும்’- அனல் பறக்க வெளியானது ‘கஸ்டடி’ படத்தின் டீசர்.

வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கஸ்டடி’ படத்தின் தீ பறக்கும் டீசர் தற்போது வெளியாகியுள்ளது.
ஸ்ரீனிவாசா சித்தூரியின், ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் தயாரிப்பில், நாகசைதன்யா நடிப்பில் தயாராகியுள்ள திரைப்படம் ‘கஸ்டடி’. மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளார். இவர்களுடன் இணைந்து பிரியாமணி பக்கா மாஸ்ஸான கதாபாத்திரத்திலும், அரவிந்த்சாமி, சரத்குமார், பிரேம்ஜி, சம்பத்குமார் என பலர் நடித்துள்ளனர்.
பைலிங்குவலாக தயாராகியுள்ள இந்த படம் வரும் மே மாதம் 12ஆம் தேதி திரைக்காண உள்ளது. சமீபத்தில் இந்த படத்திலிருந்து வெளியான கேரக்டர் போஸ்டர்கள் படத்தின் மீதான எதிர்பார்பை அதிகரித்த நிலையில், சற்று முன் வெளியான டீசரும் அதகளம் செய்து வருகிறது. அந்த டீசரில் பல விறுவிறு காட்சிகள் இடம் பெற்றுள்ளது, கடந்த வெங்கட் பிரபு படங்களை போல இந்த படமும் நிச்சயம் ரசிகளுக்கு விருந்தாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.