ஷூட்டிங்கின் போது காயம்பட்ட ‘கயல்’ நடிகை... பைக்கில் இருந்து கீழே விழுந்து விபத்து..

 
சைத்ரா ரெட்டி

சீரியல்கள் என்றாலே இல்லத்தரசிகள்  மத்தியில் பெரும் வரவேற்பு உண்டு.. அதிலும் சன் டிவி சீரியல்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. அந்தவகையில் புதிதாக ஒளிபரப்பாகி வரும், டிஆர்பியிலும் முதலிடம் பிடித்த ‘கயல்’ சீரியலில் நடித்து வருவபவர் தான் சைத்ரா ரெட்டி.

 விஜய் டிவியில் ஒளிபரப்பான ’கல்யாணம் முதல் காதல் வரை’ சீரியல் மூலமாக தமிழ் சின்னத்திரையில் அறிமுகமான இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி ஹிட் அடித்த ‘யாரடி நீ மோகினி’ சீரியலில் அழகான வில்லியாக அசத்தினார். நெகடிவ் கதாப்பாத்திரம் தான் என்றாலும், அவரது அழகுக்கும், அதற்கேற்ப அணியும் உடைகளுக்கும் என்றே ஏராளமான ரசிகர்கள்..

சைத்ரா

யாரடி நீ மோகினி சீரியல் முடிந்த பின்னர் சன் டிவியில், ‘கயல்’ தொடரில் லீட் ரோலில் நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக ’ராஜா ராணி’ புகழ் சஞ்சீவ் நடிக்கிறார். இந்நிலையில் சைத்ரா ரெட்டி கயல் ஷூட்டிங்கில் பங்கேற்றபோது வண்டியில் இருந்து கீழே விழுந்து காயமடைந்துவிட்டதாக கூறி இருக்கிறார்.

இதுகுறித்து இன்ஸ்டகிராமில் பதிவிட்டுள்ள அவர் , "கயல் ஷூட்டிங்கில் காயமடைந்துவிட்டேன். ஷூட்டிங்கில் என் கியூட்டான வெஸ்பாவில் இருந்து கீழே விழுந்துவிட்டேன். இந்த சம்பவம் நடந்து மூன்று நாட்கள் ஆகிவிட்டது. தற்போது நன்றாக உணர்கிறேன். மெசேஜ் அனுப்பிய எல்லோருக்கும் நன்றி. Much love" என சைத்ரா ரெட்டி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு உள்ளார்.

2