பாக்கியலட்சுமி சீரியல் நடிகருக்கு மிரட்டல் : போலீஸில் புகார்..

 
Baakiyalakshmi Actor Sathish Baakiyalakshmi Actor Sathish


சின்னத்திரை நடிகர் சதீஷ் குமாருக்கு, பெண் ஒருவர்  மிரட்டல் விடுத்ததை அடுத்து  அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.  

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடரில் நடித்து வருபவர் சதீஷ்குமார்(40). இந்த தொடரில் இவர் நடித்து வரும் கோபி கதாப்பாத்திரம் ரசிகர்களிடையே மிகப்பிரபலம். இவருடைய நடிப்பிற்காகவே இந்த தொடரை பார்ப்பதாகக்கூட, சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கூறுவதுண்டு. இந்த நிலையில் பெண் ஒருவர் விடுத்துள்ள மிரட்டல் காரணமாக சதீஷ் குமார் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்.  

Baakiyalakshmi Actor Sathish

கடந்த 2023ம் ஆம் ஆண்டு காலாசேத்திரா காலணியில் உள்ள அருள்மிகு அறுபடை முருகன் கோயிலுக்கு சதீஷ் சாமி கும்பிட சென்றுள்ளார்.  அப்போது 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் சதீஷ் குமாருடன் போட்டோ எடுக்க வேண்டும் என கூறியிருக்கிறார். ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டு சதீஷ் வீட்டுக்கு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.  அத்துடன் சில நாட்கள் கழித்து அந்த பெண், தொலைபேசி அழைப்பு மூலம் சதீஷை தொடர்புகொண்டு தொந்தரவு செய்திருக்கிறார். இதனையடுத்து அந்த பெண்ணின் செல்போன் எண்ணையும் சதீஷ் ப்ளாக் செய்திருக்கிறார்.  

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சதீஷ்குமாரின் வீட்டிற்கு வந்த அந்த பெண், குங்குமம் தடவிய எலுமிச்சை பழத்தை வீட்டில் வைத்துவிட்டு செய்வினை செய்துவிடுவேன் என மிரட்டியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக சதீஷ்குமார் திருவான்மியூர் காவல் நிலையிலத்தில் புகார் அளித்திருக்கிறார்.