நடிகர் விஷ்ணு விஷாலுக்கு கொரோனா.. தீவிர உடல்வலி, காய்ச்சல் இருப்பதாக ட்விட்டரில் பதிவு..

 
அங்காடித் தெரு பட இயக்குநரோடு கைகோர்த்த விஷ்ணு விஷால்

நடிகர் விஷ்ணு விஷால் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் திரையுலகை மீண்டும்  புரட்டிப்போட்டு வருகிறது. கடந்த ஆண்டு வைரஸ் பரவல் காரணமாக படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டன. திரையரங்குகளும்  மூடப்பட்டதால்  எதிர்ப்பார்த்த பல படங்கள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது. திரைத்துறையைச் சார்ந்த பலரும் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டனர்.  எல்லாம் கொஞ்சம் ஓய்ந்திருந்த நிலையில் தற்போது கொரோனா 3வது அலை மீண்டும் வேகமெடுத்திருக்கிறது. திரையரங்கள் மூடப்படுவதால்,  இந்த ஆண்டு பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட  ஆர்ஆர்ஆர், ராதே ஷ்யாம் , வலிமை போட படங்களின் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

புதிய வகை கொரோனா

இது ஒருபுறமிருக்க, கொரோனா திரைப் பிரபலங்களையும் விட்டுவைக்கவில்லை. கடந்த மாதம்  நடிகர்கள் கமல்ஹாசன், விக்ரம், அர்ஜுன், வடிவேலு ஆகியோர் கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சைக்குப் பிறகு மீண்டு வந்தனர். கடந்த 5 ஆம் தேதி  நடிகர் அருண் விஜய் மற்றும்  நடிகை மீனா ஆகியோர் கொரோனாவல் பாதிக்கப்பட்டு வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளனர்.  இதேபோல்  கொரோனா பாதிக்கப்பட்டு தனிமைபடுத்தலில் உள்ளா தெலுங்கு  நடிகர் மகேஷ் பாபு, மறைந்த தனது சொந்த சகோதரரின் இறுதிச் சடங்கில் கூட கலந்துகொள்ள முடியாத நிலையில் உள்ளார்.

சிகிச்சை முடிந்து படப்பிடிப்புக்கு  திரும்பிய விஷ்ணு விஷால்!

இந்நிலையில் தற்போது நடிகர் விஷ்ணு விஷால் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், “ பாசிடிவ் ரிசல்ட் உடன் 2022 ஆரம்பமாகி உள்ளது. ஆமாம் எனக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. கடந்த ஒரு வாரம் என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்துகொண்டு பாதுகாப்பாக இருங்கள்.   தீவிர உடல்வலி, மூக்கடைப்பு, தொண்டை கரகரப்பு மற்றும் லேசான காய்ச்சல் உள்ளது. விரைவில் இதிலிருந்து  மீண்டு வர ஆவலோடு இருக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.