நடிகர் விஜயகாந்துக்கு பாராட்டு விழா- நடிகர் விஷால்

 
விஜயகாந்த் விஷால்

நடிகர் சங்க கட்டிடத்தில் நடிகர் விஜயகாந்திற்கு கட்டாயம் பாராட்டு விழா நடைபெறும், அந்த மண்ணை மீட்ட அவருக்கு அங்கு வைத்து விழா நடத்துவது தான் முறை என நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.

சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அன்னை வேளாங்கண்ணி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மகளிர் தினத்தை முன்னிட்டு மார்க் ஆண்டனி படத்தின் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டது. இதனை நடிகர் விஷால் எஸ் ஜே சூர்யா இயக்குனர் ஆதிக்க ரவிச்சந்திரன் உள்ளிட்ட படக்  குழுவினர்  கலந்துகொண்டு வெளியிட்டனர். 

இந்நிகழ்ச்சியை தொடர்ந்து நடிகர் விஷால் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, “சமீபத்தில் மார்க் ஆண்டனி திரைப்பட படப்பிடிப்பு தளத்தில் விபத்து ஏற்பட்டது உண்மைதான். ஓட்டுநர் லாரியை நிறுத்தும் இடத்தில் நிறுத்தாமல் இருந்ததன் காரணத்தினால் மார்க் ஆண்டனி படப்பிடிப்பு தளத்தில் லாரி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் யாருக்கும் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படவில்லை. கடவுள் அருளால் நானும், எஸ் ஜே.சூர்யாவும் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினோம். 

Vishal Prays for Vijayakanth | Tamil Actors | Covid 19

நடிகர் சங்க கட்டிடம் குறித்த கேள்விக்கு இந்த வருடத்திற்குள் நடிகர் சங்க கட்டிடம் முடிப்பதற்கான பணிகள் அனைத்தும் நடைபெற்று வருகிறது. நடிகர் விஜயகாந்துக்கு நிச்சயம் பாராட்டு விழா நடத்தப்படும் அதை முறையாக நடத்துவோம்.  நடிகர் விஜயகாந்தின் பங்களிப்பு திரைத்துறையில் சாதாரண பங்களிப்பு அல்ல. அதுபோல நடிகர் சங்கத்திற்கு அவரின் பங்களிப்பு பெரிது அதற்காக அந்த கட்டிடத்தில் தான் அவருக்கு பாராட்டு விழா நடத்த வேண்டும் அதுதான் முறை. நடிகர் சங்க கட்டடத்தின் பத்திரத்தை மீட்டது நடிகர் விஜயகாந்த், அந்த மண்ணில், அந்த நிலத்தில்  அவருக்கு பாராட்டு விழா நடத்துவது தான் சரியான அங்கீகாரமாக இருக்கும்” எனக் கூறினார்.