அறுவை சிகிச்சை செய்துகொண்ட தந்தையை நலம் விசாரித்த விஜய்

 
விஜய்

தந்தையின் நலம் விசாரித்து, பெற்றோர்களோடு புகைப்படம்  எடுத்துக்கொண்ட நடிகர் விஜயின் லேட்டஸ்ட் கிளிக் இணையத்தில் வைரலாகிவருகிறது.

Image

நடிகரும் இயக்குனரும் நடிகர் விஜயின் தந்தையுமான எஸ்.ஏ சந்திரசேகர் சமீபத்தில் இருதய அறுவை சிகிச்சை செய்துகொண்டார். மருத்துவர்களின் அறிவுறுத்தலின் பேரில் திடீர் அறுவை சிகிச்சை எடுத்துக் கொண்டதாகவும் அந்த நேரங்களில் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை வாய்ஸ் நோட்-ஆக பேசி மற்றவர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தினார். 

அறுவை சிகிச்சை முடிந்து மருத்துவமனையில் ஓய்வு பெற்று வந்தவர் சமீபத்தில் வீடு திரும்பினார். இந்த நிலையில்  முன்னணி நடிகரும், மகனுமான விஜய் அவரது தந்தையை நேரில் சந்தித்து நலம் விசாரித்துள்ளார்.  வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கவிருக்கும் படத்திற்கான VFX பணிகளுக்காக அமெரிக்கா சென்ற நடிகர் விஜய் சமீபத்தில் சென்னை  திரும்பினார். தந்தை எஸ்.ஏ சந்திரசேகருக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை முடிக்கப்பட்ட வீடு திரும்பிய நிலையில் நேற்று மாலை வீட்டிற்கு சென்று நலம் விசாரித்துள்ளார் நடிகர் விஜய். அப்போது தந்தை,தாய்,மகன் என மூன்று பேரும் இணைந்து குடும்ப புகைப்படம் எடுத்துக்கொண்டனர். 

நடிகர் விஜய்யும் அவரது தந்தை எஸ் ஏ சந்திரசேகரும் கடந்த சில ஆண்டுகளாக பேசிக் கொள்வதில்லை என பேசப்பட்டு வந்த நிலையில் நேரில் சென்று தந்தையின் நலம் விசாரித்ததை  விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றன.