நடிகர் வடிவேலுவுக்கு மீண்டும் சிக்கல்!

 

நடிகர் வடிவேலுவுக்கு மீண்டும் சிக்கல்!

நீண்ட இடைவெளிக்கு பின் திரையுலகில் மீண்டும் நடிக்கவிருக்கும் நடிகர் வடிவேலுவுக்கு மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

நடிகர் வடிவேலுவுக்கு மீண்டும் சிக்கல்!

இம்சை அரசன் 23-ஆம் புலிகேசி படத்தின் இரண்டாம் பாகத்திற்கு கடந்த 2017-ஆம் ஆண்டு பூஜை போடப்பட்டு படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. இதில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்ட நடிகர் வடிவேலு, திடீரென இயக்குநர் சிம்புதேவனுடனான பிரச்னையால் படத்திலிருந்து வெளியேறினார். இதனால் படபிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டு பலக்கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டதாக படத்தின் தயாரிப்பாளர் ஷங்கர் தயாரிப்பு சங்கத்தில் புகார் அளித்திருந்தார். இம்சை அரசன் 23-ஆம் புலிகேசி படத்தின் இரண்டாம் பாகம் தொடர்பான பிரச்சனைகள் சுமூகமாக முடிக்கப்பட்டுவிட்டதாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் கடந்த சில நாட்களுக்கு முன் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதனால் நடிகர் வடிவேலு திரைப்படங்களில் நடிப்பதற்கு விதிக்கப்பட்ட ரெட் கார்டு நீக்கப்பட்டது.

நடிகர் வடிவேலுவுக்கு மீண்டும் சிக்கல்!

இதனையடுத்து நடிகர் வடிவேலு இயக்குநர் சுராஜ் இயக்கத்தில், லைக்கா தயாரிப்பில் நடிக்க வடிவேலு ஒப்பந்தமாகியுள்ளார். அந்த படத்திற்கு நாய்சேகர் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது ஏ.ஜி.எஸ். நிறுவனம் நடிகர் சதீஷை கதாநாயகனாக வைத்து புதிதாக தயாரிக்க உள்ள படத்திற்கு நாய் சேகர் என்ற தலைப்பை வைத்துள்ளது. நடிகர் சிவகார்த்திகேயன் நாய் சேகர் படத்தின் முதல் தோற்றத்தை தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

நாய் சேகர் தலைப்பு வடிவேலுவுக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது கிடைக்காததால், அவருடைய புதிய படத்திற்கு என்ன தலைப்பு வைக்கப்படும் என்பது மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.